பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蜜葛惑 மன்னிக்கத் தெரியாதவர் இந்த உண்மை மெதுவாகப் பரவியது. வேகமாகப் பதந்தது. எங்கும், எல்லார் செவிகளிலும் பட்டது. அனைவர் வாயிலும் அடிபட்டது. மாதவனின் குதிரை மிரண்டது. திரும்பியது, கும்பலே ஒதுக்கிக்கொண்டு வெளியேறத் துடித்தது. . . - மக்கள் முகத்திலே பயம். அவர்கள் உள்ளத்திலே பீதி. எங்கும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. அதே நேரத்தில், எங்கோ இருந்த ஒரே ஒருவர் முகத் தில் சிரிப்பு வெடித்தது. தனது பாக்கெட் கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவர் முகூர்த்தம் முடிந்துவிட்டது. இதற்குள் புயல் பாடம்படித்திருப்பான்!” என்று முனங்கினர். தனிமையையும் மறந்து பெரும் சிரிப்பு சிரித்தார். அவர்தான் தன்வைச் செல்வரங்கம். 'தீபம்’, ஆண்டு மல்ர் 1969.