பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 互宽 வருவதற்குள் அவனுக்கு வயசு நாற்பதாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அவன் வாழ்க்கையில் சுந்தரம் வந்து சேர்ந்தாள். - - மனைவி என்பவள் ஒரு புதுமை என்ற நிலைமை மாறி, கவர்ச்சி சக்தி குறைந்து, பழக்கப்பட்டவள் ஆகி, சர்வ சாதாரணத் தன்மையை அடைந்துவிடுவதற்குப் போதுமான காலம் கழிந்துவிட்ட பிறகும்கூட, சுப்பிரமணியனுக்கு சின்னப் பெண் ஆகக் காட்சி தந்த சுந்தரத்திடம் புதுமைத் கவர்ச்சி குறையாமலே இருந்தது. அவள் பேச்சும் சிரிப்பும் விளையாட்டுத்தனமும் அவனுக்கு அ வ ள் டம் உள்ள மோகத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன. அவள் ஸ்டைல் பேபி"யாக விளங்குவதில் கருத்துச் செலுத்த ஆரம்பித்த பிறகு, அவனுடைய வியப்பும் மகிழ்ச்சியும் பெருமையும் கட்டுக்குள் அடங்காதவாறு பொங்கி வழிய லாயின. அவளுடைய விசித்திரப் போக்குகளை அவன் ஆதரிப் பதற்கு இவை வழி செய்தன. . ஸ்டைலையும் ஃபாஷனையும் பெண்கள் எப்படி எப்படி எல்லாமோ கற்றுக்கொள்கிருர்கள். நாகரிக முதிர்ச்சியுற்நி பல பெண்களைப் பார்த்தும், டீச்சரம்மாள்களையும் கல்லூரி மாணவிகளையும் கவனித்தும், சினிமாப் படங்களிலிருந்தும், பத்திரிகைப் படங்கள் குறிப்புகள் மூலமும் கற்றுக்கொள்கிற பெண்களைப்போலவே, சுந்தரமும் நாகரிக முறைகளையும் சிங்காரிப்புக் கலைகளையும் படித்துத் தேர்ந்தாள். அவற்றில் வெகு தீவிரமான முன்னேற்றமும் காட்டினள். அவள் நடையும், உடைகள் அணிகிற தன்மையும், பிறவும் இதர பெண்களின் கோணல் பார்வைக்கும், வம்புப் பேச்சுக்கும், குத்தல் சிரிப்புக்கும் இலக்காயின. பின், ஆண் களின் கண்களையும் மனசையும் சொடுக்கி இழுக்கும் காந்தத் தூண்டில்களாக அவை விளங்காமலா போகும்? எல்லாம் அதிசயமாகத்தானி ருக்கம்மா! இவள் எந்தச் சீமையிலோ இருந்து வந்தவ மாதிரித்தான், வீட்டுக்குள்ளே செருப்பு போட்டுக்கிட்டுத்தான் நடக்கிரு. வீட்டுக்குள்ளேயே