பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 17 வாழ்க்கைத் துணைவராக வந்து சேர்ந்து விட்டாரே என்ற வருத்தம் ஆரம்பம் முதலே அவள் மனசின் ஒரு பகுதியில் இடம்பிடித்துக் கொண்டது. . சுப்பிரமணியன் கறுப்பாய், ஒல்லியாய், நெட்டையாய் இருந்தான். முகத்தில் அது என்ன களையோ-கிழத்தினமோ, அசட்டுக் களையோ, பிரேதக்களை தானே! கண்கள் குழி விழுந்து, கன்னங்கள் ஒட்டி, நெற்றி மேடிட்டு, வழுக்கை தோன்றி, அடர்த்தியற்றுக் கிடந்த உரோமங்களில் அரை வாசி நரைபடிந்து . ஐயோ கண்ருவி! அவன் இளைஞனுக இருந்திருக்கக்கூடாதா? தலைமயிர் அடர்த்தியாய் கரு கரு வென்று, பார்ப்பதற்கு வசீகரமாய் இருந்திருக்கக்கூடாதா? ஆள் இன்னும் கொஞ்சம் முறுக்காய், அழகாய் இருக்கக் கூடாதா?-இப்படி எத்தனையோ ஏக் கங்க கள அவள் வளர்த்தது உண்டு. - என்ருலும் அவன் அவளை அன்பாய், எவ்வளவோ ஆசையோடு, செல்லமாய் நடத்தி வந்தது அவளது மனக் குறைகளை அவள் மூடி மறைப்பதற்கும். பெரும்பாலான சமயங்களில் மறந்து விடுவதற்கும் துணை புரிந்தது. . ஆஞல், மனம் என்பது எப்போதும் ஒரே சீராகவா இருக் கிறது? அடிக்கடி குரங்குத்தனம் பண்ணுவது தானே அதன் இயல்பு: சுந்தரத்தின் மனமும் அவ்வப்போது-வசீகரமான இளைஞன் எவனேயாவது பார்க்கிறபோது, இளமையும் பொருத்தமும் உடைய இன்ப ஜோடிகளைக் காண நேரிடுகிற போது-வாலாட்டிவிடும். அவளுக்கு உள்ளக்கிளர்ச்சியும் உணர்வுத் துறுதுறுப்பும் உண்டாக்கி விடும். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் தான் அவன் அண்டை வீட்டு சேதுராமனிடம் சிறு குறும்பு செய்யத் துணிந்தாள். அதை வளர்க்க வேண்டும் எனும் ஆசை அவளுக்கு அப்போது இருந்ததில்லை. அவள் மனம் அவன் நினைவை ஒதுக்கி விட்டது என்றும் சொல்ல முடியாது. சேது நல்லாத்தானிருக்கான். ஆனல் பொம்பிளைப் பிள்ளை மாதிரி கூச்சப்படுதான். சுச்சம் ரொம்ப