பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுப் பெண் 33 சேதுராமனும் பாலுவும் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்தவர்கள், அவளாக விலகிக்கொள்வாள் என்று எதிர் பார்த்தார்கள். அவள் அப்படிச் செய்யாமல், கைகளால் வழியை அடைத்துக்கொண்டு, வாசல் மத்தியில் ஸ்டைலாக நின்று, எப்படிப் போவீங்க பார்ப்போம்!” என்று கிண்டலில் இறங்கினுள். சேது சும்மா சிரித்தபடி நின்ருன். "ஏன் நிக்கிறே? இடிச்சுத் தள்ளிக்கிட்டுப் போயேன்!" என்று பாலு சொன்னன். அண்ணன் துணியவில்லை. - ‘ஊம். தம்பியாபுள்ளெ தான் வழி சொல்லித் தாருரே! போவது தானே? என்று அத்தை அவனைக் குறும்புத்தனமாக நோக்கிள்ை. சேது தயங்கி நின்றது தம்பிக்குப்பிடிக்கவில்லை. பின்னே வழிமறிச்சான் சாமியாக் குறுக்கே நின்னல் வெளியே இருந்து வாறவங்க எப்படி உள்ளே போறதாம்?' என்று கேட்டு, அவளைப் பிடித்துத் தள்ளின்ை. அவள் வழிவிடாமல் மறித்து நிற்கப் போராடிளுள். அவளுக்கு அது நல்ல தமாஷாக இருந்தது. ஏன் நீ சும்மா நிக்கிறே? நீயும் சேர்ந்து தள்ளிப்பாரேன் என்று சிரித்தாள். பாலு அவள் கழுத்தில் விரல்களை லேசாக ஓடவிட்டுச் சீண்டவும், ஏஎய், கீச்சம் காட்டப்படாது. எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு என்று கத்தினுள். பின்னே வழி விடு!" என்று சிரித்துக் கொண்டே பாலு அதிகமாகக் கிசுகிசு மூட்டின்ை. - அவள் நெளிந்து வளைந்து முரண்டினுள். சேது வேடிக்கை பார்த்தபடி நின்ருன். 'ஏய் என்ன கலாட்டா இது? ஏ பாலு, அவள் கூட உனக்கு என்ன விளையாட்டு?’ என்ற அதட்டல் கேட்டதும்