பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器證 மன்னிக்கத் தெரியாதவர் பாள் என்ற வெற்றிக் களிப்பு அவன் நெஞ்சில் நிறைந்து நின்றது. - . சுந்தரம் துவண்டு கிடந்து கண்ணிர் வடித்தாள். தனக்குக் கடுமையான தண்டனை அளித்த கணவன்மீது வெறுப்புக்கொள்ளவோ, கோபம்கொள்ளவோ திராணி பற்றுக் கிடந்தாள் அவள். - அவளைச் சுற்றியிருந்த பெண்கள் ஆளுக்கு ஒன்ருய், பலப்பல பேசினர்கள். அவளு க் கு இதமாக இருக்கும் சிகிச்சைகள் செய்தார்கள். . அகிலாண்டத்தம்மாள் அ வ ளு க் கா. க க் கண்ணிர் சிந்தினுள், அடி பாவிப் பெண்ணே! நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேனே, கேட்டியா அடக்கம் ஒடுக்கமா இருஇரு இன்னு ஆயிரம்தரம் சொன்னேனே!” என்று புலம்பினுள். "இப்படி எல்லாம் நடப்பது குற்றமா?’ என்று கேட்டுக் கலகலவெனச் சிரித்துக் குதிக்கும் பழக்கத்தை வளர்த்து வந்த சுந்தரம் இப்போது வெறும் சிரிப்புச் சிரிக்கக்கூடத் தெம்பு இல்லாதவளாய்ச் சுருண்டு கிடந்தாள். "இம்’, ஜூலை 1958