பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 釜建 மெளனமாக ஏற்றுக்கொள்வது வழக்கம். அவர்கள் சுபாவம் அப்படி. ஒரு சமயம் நடுத்தெரு செயலான வீடுகளில் ஒன்றைச் சேர்ந்த, நல்ல குடும்பத்து வாலிபனை ராமலிங்கம் இளமைத் துடிப்பில் ஒரு வேலை செய்துவிட்டான். சேரியிலிருந்த வீடு ஒன்றில் புகுந்து, அங்கே குடியிருந்த விதவை ஒருத்தியோடு உறவுகொண்டுவிட்டான். அவளும் அவனுக்கு உடந்தை தான். இது வளர்ந்து, அவள் அவன் வீடு தேடிவந்து, அங்கேயே இராப்பொழுதுகளைக் கழி க் கும் நிலைமைக்கு முற்றியது. அக்கப்போர் ஆசாமிகள் சிலர் இதைக் கவனித்து விட்டார்கள். ஒருநாள் இரவு, அவளும் அவனும் வீட்டுக்குள் இருக்கிறபோது, வெளியே கதவைத் தாழிட்டு, பெரிய பூட்டாக ஒன்றைப் போட்டுப் பூட்டிவிட்டார்கள். சந்தியில் நின்றுகொண்டு, நடுத்தெருவா லெட்சனமா இல்லையே! அக்கம் பக்கத்திலே வீடுகள் இருக்குதே, நல்லவங்க பெரிய வங்க குடியிருக்காங்களே என்கிற உ ண ர் வு மங்கிப் போச்சுதே!’ என்ற தன்மையில் சத்தமிட்டு ரகளை செய் தார்கள்.” அவர்கள் பேச்சும் கூப்பாடும் மகராஜபிள்ளை காதில் விழாமல் இருக்குமா? அவர் கூப்பிட்டு, என்ன, ஏது?" என்று விசாரித்தார். விவரம் அறிந்தார். சரி. விடியட்டும். அவங்க ரெண்டுபேரும் இரவை இஷ்டம்போல் கழிக்கட்டும். நீங்களும் வீட்டுக்குப்போப் துரங்குங்க. விடிந்த உடனே வந்து சேருங்க” என்று பிள்ளை சொன்னர். சாவியை வாங்கி வைத்துக்கொண்டார். "மாமா, நீங்க திறந்து விட்டு விடுவீங்களா? என்று ஒரு மருமகன் கேட்டான். "நான் ஏன் திறக்கிறேன்? அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம்.' - மன்னிக்கணும், காப்பாத்தணுமின்னு ராமலிங்கமும் அந்தச் சிறுக்கியும் அழுது கெஞ்சில்ை..." -