பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 盘? இருந்தது. இருவர் பேச்சும் விளையாட்டும் பார்வையும் நெருக்கத்துக்குத் துணைசெய்வதாயிருந்தன. இரவு தன் சக்தியைக் காட்டியது. எனவே அவனும் அவளும் பொன்னை வாய்ப்பை நன்முகப் பயன்படுத்திக்கொண்டார்கள். வில்லன் காலம் விளையாட்டோடு நின்றுவிடாது, தன் வினைத்திறனையும் முடுக்கிவிட்டது. வெளியூர் சென்றிருந்த பிள்ளை, அங்குள்ள வேலை விரைவில் முடிந்துவிட்டதனாலோ அல்லது தேடிப்போனவர்கள் இல்லை, வர நாட்கள் பல ஆகும், காத்திருப்பது வீண் என உணர்ந்ததனுலோ, மனேவி யிடம் சொல்லிவிட்டுப் போனதற்கு மாருகச் சீக்கிரமே திரும்பினர். அதிலும், ராத்திரி வேளையிலேயே வீடு வந்து விட்டார். அவர் சந்தேகப்பட்டு எதுவும் செய்யவில்லை. சண்பகத்தின்மீது அவர் சந்தேகம்கொண்டதே கிடையாது. காலம் செய்த சதிவேலைதான் இது. கதவைத் தட்டு தட்டு என்று தட்டினர் பிள்ளை. குழப்ப முற்ற சண்பகம், பயத்தோடு, மெதுவாகத்தான் கதவைத் திறந்தாள். ஏன் இவ்வளவு நேரம்? ஏன் விளக்கு ஏற்ற வில்லை? விடிவிளக்கை ஏன் அணைத்தே? ரத்தினம் துரங்குருன?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனவர், யாரது? யார் அங்கே பதுங்கினது?’ என்று கத்தினர். கையிலிருந்த பாட்டரி விளக்கை அழுத்தினர். அது கொட்டிய வெளிச்சம் சுந்தரத்தைக் காட்டிக் கொடுத்தது. சண்பகத்தின் நிலையையும் தெளிவுபடுத்தியது. அவருள் கோபத்தை, ஆத்திரத்தை, கொதிப்பைக் கிளறி விட்டது. - டேய்!” என்று கூவிக்கொண்டு அவர் பாய்வதற்குள், சண்பகம் துணிச்சலாக பிள்ளையின் குறுக்கே விழுந்தாள். சுந்தரம் தப்பிவெளியே ஒடுவதற்குச் செளகரியம் ஏற்பட்டது. அவள் போக்கு அவருக்கு வெறி ஏற்றியது. கெட்ட சிறுக்கி: நீயும் அவைேடு கெட்டு ஒழி! என்று கர்ஜித்து, அவள் கூந்தலைப் பிடித்து அவளை இழுத்து வெளியே தள்ளினர். உனக்கு இந்தப் புத்தி ஏன் வந்தது? பாழாய்ப்போறவளே?"