பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీశీ மன்னிக்கத் தெரியாதவர் என்று உறுமிஞர். கதவை அடைத்துப் பலமாகத் தாழ்ப்பா ளிட்டார். 3. சண்பகம் கதவைத் தட்டினள். கெஞ்சிள்ை. இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க. இதுவரை நான் உங்களுக்குத் இரோகம் செய்யலே. இப் போ புத்திகெட்டுப்போயி, தெரியாத்தனமாக போதாத காலத்தினலே, தப்பு செய்திட் டேன், ஆணையிடுறேன். இனிமேலே..." என்றெல்லாம் உருக்கமாகப் புலம்பினுள். . பிள்ளையின் காதுகளும் நெஞ்சும் கல்லாக மாறியிருந்தன. மன்னிக்கனும், மன்னிப்புக் கிடையவே கிடையாதா? என்று மண்டையைக் கதவில் மோதி மோதிக் கதறினுள், சண்பகம். வீட்டுக் கதவும் பிள்ளையின் இதயக் கதவும் அடைபட்டது பட்டதுதான். மன்னிப்பு ம க ராஜ பிள்ளை யின் அகராதியிலேயே இல்லாத வார்த்தை அல்லவா அது என்று அவர் மனக் குறளி பேசிக்கொண்டது. மகராஜபிள்ளை அமர்க்களமாகச் சிரித்து, அழுத்தமாகச் சொல்வது வழக்கம் 'நீங்க விழுந்து விழுந்து கும்பிடுகிற கடவுள்கள்கூட மன்னிப்பு என்பதிலே நம்பிக்கை வைப்பதில்லை, தெரியுமா? நான் அதிர்ச்சி தரும்படியாக எதையும் சொல்ல வரவில்லை. புதுசாகவும் சொல்லவில்லை. வேத வேதாந்த புராணங்கள்; பக்தர்களின் புலம்பல்கள் எல்லாம் சொல்வதைத்தான் கட்அண்ட் ரைட்டாக எடுத்துச் சொல்கிறேன். வாழ்க்கை என்பதே கடவுள் மனிதருக்கு அளிக்கிற தண்டனை என்று தான் அவை எல்லாம் கூறுகின்றன. சிலர் சுகபோக வாழ்வு வாழ நேர்ந்திருப்பதும், அநேகர் மிகுந்த கஷ்டங்களை அனுப விக்க நேர்வதும் அவரவர் பூாவஜன்ம பலன் என்றும், முன்பு செய்த பாப புண்ணியங்களுக்குத் தக்கபடி ஆண்டவன். மனிதர் தலையில் எழுதிவைக்கிருன் என்றும் மக்கள் சொல்ல