பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

あび மன்னிக்கத் தெரியாதவர் துணிந்தோ அல்லது எதேச்சையாகவோ, குற்றம் செய்துவிடுபவர்களைப் பெருந்தன்மையோடு மன்னித்து விட்டால் அவர்களுக்குக் குளிர் விட்டுப் போகும். திரும்பத் திரும்பக் குற்றமே செய்து கொண்டிருப்பார்கள் என்று தான் அவர் கருதினர். பெருந்தன்மையோடு உரிய தருணத்தில் மன்னிப்பு அருளினுல் மனிதர் உள்ளத்தில் புத்துணர்வும் அவர்கள் வாழ் வில் புதுமலர்ச்சியும் ஏற்படக்கூடும். அப்படி ஒருவேளையில்சரியான சமயத்தில்-மன்னிப்பு அருளப்படாத காரணத் தினுல், கடுமையான தண்டனை பெற்று புறக்கணிக்கப்பட்ட தல்ை, செய்யும் வகை அறியாத ஒரு நிலையிலே சிலர் சீரழிந்துபோக வழிவகைகள் ஏற்படுவதும் உண்டு. இதை மகராஜபிள்ளே உணர மறுத்தார். ஆகவே அவரே அவர் மனைவி சண்பகம் கெட்டுக் குட்டிச் சுவராவதற்கு தளம் அமைத்துக் கொடுத்ததுபோல் ஆயிற்று. அவளே அவர் மன்னித்து, வீட்டில் சேர்த்துக் கொண்டு, மகனேயும் வளர்த்து வரும்படி நல்வாழ்வு அளித் திருந்தால், அவள் நல்லவளாகவே நாளோட்டியிருக்கக்கூடும். அவள் பாட புண்ணியத்துக்குப் பயந்த பெண்தான். ஆளுல், பிள்ளை இரவிலே வெளியே தள்ளிக் கதவை அடைத்துவிட்டார். அவள் குளிரிலும் வாடையிலும் கிடந்து இருட்டின் தனிமையில் அஞ்சி, தன் நிலையை எண்ணிக் குமைந்து அழுது புழுங்கிளுள். அவள் அத்தை மகன் சுந்தரம் ஊரைவிட்டே ஓடிவிட வில்லை. என்ன நடக்கிறது பார்ப்போம் என்று இருளில் பதுங்கி நின்ருன். விடிவதற்கு முன்பு, சண்பகம் எழுந்து ஏதோ ஒரு முடிவுடன் நடக்க ஆரம்பிக்கவும் அவன் அவளிடம் ஓடி வந்தான், அனுதாபத்தோடு பேசினன். - அவள் அழுதுகொண்டே, இனிமே எனக்கென்ன இருக்கு? நான் குளத்திலே விழுந்து சாகப்போகிறேன்' என்று சொல்லியவாறே நடக்கவும், அவளை அவன் பிடித்து ஆதர