பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5盤 மன்னிக்கத் தெரியாதவர் சண்பகத்தின் வாழ்வில் விளையாட்டு பண்ணிய" வில்லன் காலம் அவள் கதை அப்படித் திடீர் முடிவு பெறு அதை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. இங்கே நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்து வரலாமே என்ருெரு ஆவாவை சுந்தரம் மனத்தில் புகுத்தி, அவனை உந்தித் தள்ளியது. கந்தரம் சரியான சமயத்தில் வந்து சேர்ந்தான். சண்பகத்தை தடுத்து ஆட்கொண்டான்' அவனுடைய அன்பும் ஆதரவும், பரிவும் பிரியமும் அவளை இளக்கின. உயிராசை அவளே இயக்கியது. அவன் சொல்லியவாறெல்லாம், அவன் காட்டுகிற வழியில், அவனைப் பின்தொடர அவள் சித்தமாஞள். சுந்தரத்துக்கு மட்டிலா மகிழ்ச்சி. சாவதற்கிருந்த ஒரு உயிரைக் காப்பாற்றிவிட்ட சந்தோஷம் மட்டுமல்ல. தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய-விதிவசத்தால் தன்ன விட்டு விலகிப் போய் அந்நியமாகியிருந்த-தன் அன்புக்கு உரியவள் தன்னிடமே வந்து சேர்ந்துவிட்டாளே என்ற ஆனந்தக் களிப்பு: சண்பகம் அத்தான் சுந்தரத்தோடு சேர்ந்து வாழ்கிருள் என்பதை அறிய நேர்ந்த உற்ருரும் உறவினரும் அவளுக் காகப் பரிந்து பேசுவதை விட்டு விட்டார்கள். சவம் எக்கேடும் கெட்டு எப்படியும் நாசமாப் போகட் டும் ருசி கண்ட பூனே உறியை உறியைத் தாவும் என்பது வெறும் பேச்சா என்ன? அவள் இந்த வீட்டிலேயே இருந் தாலும், அந்த அயோக்கியப் பய அடிக்கடி வந்து போய்க் கொண்டுதான் இருப்பான். இப்ப இரண்டு பேரும் ஒரே வீட்டிலே சேர்ந்து இருக்கிருங்க இல்லே? போகட்டும் என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார், மகராஜபிள்ளை. அவர் தன் மகன் ரத்தினத்துக்கு அவன் அம்மாவைப் பற்றிய உண்மை தெரியாமல் இருக்க வேண்டுமே என்று தான் கவலைப்பட்டார். அம்மா இல்லாத குறை அவன்