பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 岱芷 பையன் பிசாசாக மாறக்கூடிய தாயைக் கண்டு அஞ்சி ன்ை. வெந்ததைத் தின்னு, விதியேன்னு வாழ்ந்து, வேளை வந்தால் சாகனும் என்பதை வாழ்க்கைத் தத்துவமாகக் கொண்டு, அதையே அவனுக்கும் போதித்து, வேறு எதைப் பத்தியும் மூச்சுகாட்டப்படாது மூச்சு!’ என்று எச்சரித்தும் வைத்தாள் தாய். அவன் பயந்து பணிந்தான். ஆகவே, அவன் மனம் அன்பு அதிகம் காட்டிய அண்ணனை அதிகமாக நாடியதில் வியப்பு இல்லைதான். காலம் ஓடியது. அதிக உழைப்பு, அரிக்கும் கவலை, அரைப் பட்டினி நிலைமை, ஒய்வு இல்லாமை எல்லாம் சேர்ந்து சண்பகத்தை ஒடாய் தேய்த்தன, சீக்கில் தள்ளின. அவள் படுத்த படுக்கை ஆகிவிட்டாள். அவள் நினவெல் லாம், கவலை எல்லாம், வேதனை எல்லாம் எனக்குப் பிறகு துரை கதி என்ன ஆகும்?’ என்பதுதான். அவள் தாயுள்ளத்தில் சிறு ஒளி ஒன்று துருவ நட்சத்திர மாய் இலங்கிக்கொண்டிருந்தது. அதைத்தான் பற்றிக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை. அவள் ரத்தினத்தை அவசரம் என்று வரவழைத்தாள். ராசா, நான் பிழைக்கமாட்டேன். துரை உன் தம்பி. அவனுக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை. நீதான் அவனைக் காப்பாத்தனும். நீயும் சின்னப் பையன்தான்* இருந்தாலும்..." அழுகையும் துக்கமும் அவள் வாயை அடைத் தன. துயரம் கனக்கும் நெஞ்சுடன், ‘என் தம்பிக்கு ஒரு குனர் யும் வராது. நான் கவனித்துக்கொள்கிறேன்’ என்று வாக்கு கொடுத்தான் ரத்தினம். ராசா, நீ நல்லாயிருக்கணும்! என்று நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்த்தினுள் தாய். அதன் பிறகு அவள் வெகுநாட்கள் உயிரோடு இருக்க வில்லை.