பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 密器 ரத்தினத்தின் உள்ளம் பதறியது. அவன் உடலும் நடுங்கியது. யாரு சொன்ன? யாரு இப்படிச் சொன்னது?" என்று படபடத்தான். அப்பா...அப்பா, என்ன விரட்டி விட்டாங்க’ என்று அழுகையோடு புலம்பினன் சிறுவன். அப்பாவா? நம்ம அம்மாவையா அப்படி... அண்ணன் அதிர்ந்து போன்ை. கேடு கெட்டவ பெத்த தேவாங்கா நான்? அண்ணு, நம்ம அம்மா..."அழுகை விம்மி வந்தது. ரத்தினத்தின் முகம் கறுத்தது. அவன் நெஞ்சில் யாரோ ஒங்கிக் குத்தியதுபோல் வலித்தது. அழாதே தம்பி. அவர் உன்னை ஏற்றுக்கொள்ளா விட்டால் போகட்டும். உனக்கு நான் துணை. நீ வருத்தப் படாதே. அழக்கூடாது!" என்று தேற்றி, அவனை அன்புட னும் ஆதரவோடும் தழுவிக்கொண்டான். அப்பா...' என்று தேம்பினுன் பையன். "அவர் பேச்சை எடுக்காதே. அவருக்கு மன்னிக்கவே தெரியாது என்று அ ம் ம ஒரு தடவை சொன்னுள். மன்னிப்பு பெறுவதற்குக்கூட அவர் தகுதியில்லாதவர்தான். ஒரு களங்கமும் அறியாத சின்னஞ்சிறுசை வாயில் வந்தபடி பேசி விரட்டியடிப்பது என்ருல், ஹாங் அவரும் ஒரு மனுசன? ஆங்காரத்தோடு பேசினன் ரத்தினம். - சில நிமிஷ நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தது அடுத்த ரயில் வண்டி. அதில் ரத்தினம் தம்பியை ஏற்றி தானும் ஏறிக்கொண்டான். அவர்கள் வாழ்வின் திசை மாறிவிட் டது! இனி அந்த ஊரில் அவர்களுக்கு வேலை இல்லை. நேரம் ஊர்ந்துகொண்டிருந்தது. மகராஜபிள்ளைக்கு மனசே நல்லா இல்லை என்ருெரு உணர்வு ஏற்பட்டது. அமைதியற்று அவர் கிடந்தார். எழுந்தார். நடந்தார். இருந்தார். மீண்டும் உலாவினர். 3