பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ அழகை அள்ளிப் பொழிந்துகொண்டிருந்தது நிலவு. உள் ஊழல்களை எல்லாம் அலங்கார ஆடைகளாலும் மேல் பூச்சுக்களாலும் மூடி மறைத்து வெளிச்சம் போடும் வீணர் களேயும் ஒய்யாரிகளையும் போலவே, சந்திரிகையைப் பேர்த்துக் கொண்டு சொகுசாக விளங்கியது உலகம். அன்று பெளர்ணமி. "புத்தகைப் பரிணுமம் பெறுவதற்கிருந்த சித்தார்த்தன், இத்தகைய பெளர்ணமி இரவு ஒன்றிலேதான் வெளி யேறிஞன்." மோகனச் சூழ்நிலையில், சந்திரனின் அமுத ஒளியில் குளிக்கும் கல் சிலையென அமர்ந்திருந்த மாதவனின் உள்ளம் பேசியது இப்படி. உடனே சிரித்தது அவன் மனக் குறளி. -புத்தனையும் உன்னையும் ஒப்பிடாதே. உன்ளுேடு எவனேயுமே ஒப்பிடாதே. நீ தேர்ந்திருப்பது-துணிந்து நடை போடப் போவது-ஒற்றைத் தனிப் பாதையாகும். . . அழகு போர்த்திய உலகம் அமைதியில் உறங்கிக் கிடந்தது. விண்ணும் மண்ணும், ஆசைநாயகன் எவனுக் காகவோ சிங்காரித்துக்கொண்டு காத்திருக்கும் மோகினிகள் மாதிரித் திகழ்ந்தன. ஊருக்கு வடக்கேயுள்ள குளத்தின் கரைமீது ஆழ்ந்த யோசனையில் லயித்திருந்த மாதவன் கண்கள்கூட இயற்கை யின் மோகன எழிலால் வசீகரிக்கப்பட்டன. ஊர்ந்து நெளியும் காற்றினல் சலனமுற்ற நீர்ப்பரப்பின் சிறுசிறு அசைவுகள் தோறும் அம்புவியின் வெள்ளிய ஒலி அற்புதம் செய்துகொண் டிருந்தது.