பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ ?建 போதும், நினைவின் நோக்கைப் பின்னுக்குச் செலுத்தி தனது வாழ்வுப் பாதையை ஆராய அவன் தவறியதில்லை. அவன் எளிய வாழ்வு வாழ்ந்தான். நேர்மையாளஞய், உண்மை விளம்பியாய், உழைப்பிலே உற்சாகம் உடையவளுப் வாழ்க்கை நடத்தினன். மனிதப் பண்புகள் குன்ருதவளுக விளங்கிஞன். அவன் எவரையும் ஏமாற்றியதில்லை; ஏமாற்ற ஆசைப் பட்டதுமில்லை. ஆனல் அவனை ஏமாந்தவனுக்க அநேகர் தயங்கவில்லை. அவன் யாரையும் பழிக்கவோ பரிகசிக்கவோ ஆர்வம் கொண்டதில்லை. எனினும் அவனை 'உருப்படத் தெரியாதவன், ஏமாந்த சோணகிரி’, ’பைத்தியம்’ என் றெல்லாம் மற்றவர்கள் பரிகசித்தார்கள்... இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான் மாதவன். இனி நாம் புதியதோர் வழியில் செல்வோம், கெட்ட போரிடும் உலகத்துக்கு அதன் முறைகள் மூலமே புத்தி கற்பிப்போம் என்று துணிந்தான். அன்று அவனது முப்பத்து மூன்ருவது பிறந்த நாள். 'இன்று நாம் புதிதாகப் பிறந்தோம், சந்தேகமில்லை; இனி ஒர் புது சக்தி தோன்றும் என்று வாழ்த்துக் கூறியது அவன் உள்ளம். குளக்கரையில் அமர்ந்திருந்த மாதவன் சரி, வேளே வந்து விட்டது!’ என்று எழுந்தான். ஊருக்குள் நடந்தான். அப்பொழுது இரவு மணி பதினென்று தானிருக்கும். எனினும்,-பட்டிக்காட்டோடும் சேராத பட்டணக்கரையு மில்லாத"-அந்த இரண்டுங்கெட்டான் ஊர் சவ உறக்கத் தில் அயர்ந்து கிடந்தது. பகல் வேளையில் வேகமும் உயிர்ப்பும் நிறைந்து ஜே ஜே’ என்றிருந்த ஊர் சூனியக்காரி எவளுடைய மாயாஜாலத் துக்கோ உட்பட்டு உணர்வற்று, உயிரற்று, இயக்கமற்று மயங்கிக் கிடப்பதுபோல் தோன்றியது. வீடுகளுக்கும் வீதி களுக்கும் எழில் முலாம் பூசித் திகழ்ந்த பால்நிலவு ஊரின்