பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 77

  • நான் உங்கள் இஷ்டம்போல் துணை புரிவேன். என்ன நம்புங்கள் என்று அழாக்குறையாக அறிவித்தாள் அவள்.

கூடாது கூடாது. . நான் போகிறேன்" என்று சொல்வி விட்டு வேகமாக நடந்தான் அவன். அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. காந்திமதிக்கு அழுகை பொங்கியது. நெஞ்சம் துயரத் தால் கணக்க, தொண்டையில் சோகம் அடைக்க, கண்கள் நீரைக் கொட்ட அவள் ஏக்கத்தோடும், ஏமாற்றத்தோடும் வீட்டுக்குள்ளே இருளில் கலந்துவிட்டாள். நிலவொளியில் குளித்தபடி நடந்த மாதவன் மனத்தில் ஓர் திருப்தி நிறைந்து நின்றது. இன்று அவளுக்கு ஏமாற்ற மும் வேதனையுமாகத்தான் இருக்கும். ஆனல் எதிர்காலத்தில் அவளே இந்தச் சந்தர்ப்பத்தை எண்ணி மகிழ்ச்சி அடைவாது என்பது திண்ணம். குடும்பப் பெண்களில் அநேகருக்குக் கன்னிப் பருவக் காதல் தோல்வியாக முடிந்தபோதிலும், சம்பிரதாய ரீதியில் நடைபெறும் கல்யாணம் வாழ்வில் உறுதியும் நிச்சயமான ஒரு ஸ்தானமும் தகுதியும் பெற்றுத் தரும் நல் வாய்ப்பாகவே அமைகிறது என்று நினைத்தான். 'இதுதான் நான் செய்யும் கடைசி நல்ல காரியம்: என்ற எண்ணம் அவன் மனப்பரப்பிலே மின்வெட்டியது. நான் செய்ய ஆசைப்பட்ட நல்ல காரியம்கூட இன்னெரு ஆத்மா வுக்கு வேதனையும் அழுகையுமல்லவா தத்துவிட்டது: என்றும் எண்ணுதிருக்க முடியவில்லை அவளுல், நல்லவகை வாழ்வதனல் லாபம் இல்லை என்று உணர்ந்த மாதவனின் முன்னேர்களில் எவரும் பூரண அயோக்கியர் களாக விளங்கியவர்கள் அல்லர். அவனுடைய தாத்தா ஒண்டிப்புலியா பிள்ளை ஊரில் நல்ல பெயரோடு வாழ்ந்து, சுய முயற்சியால் சொத்து சேர்த்து வைத்தார். தனது பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியும் அளிக்க முடிந்தது அவரால். அவருடைய மூத்த