பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊蕊 மன்னிக்கத் தெரியாதவர் வேறு ஏதாவது வேண்டுமா ஸார்?' என்று கேட்டபடி வந்து சேர்ந்தான் பாலச்சந்திரன். எழுதுவதற்குத் தாள். பேஞ மைக்கூடு, பென்சில், புத்தகங்கள் ஏதாவது இருந்தால்...' என்று இழுத்தான் மாதவன. -

இந்தாங்க. உங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம். அப்பா உங்களிடம் கொடுக்கச் சொன்னுங்க” என்று கூறி சந்திரன் அவனிடம் பத்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தான்.

ஆடடே! என்று குதித்தது மாதவ மனக்குறளி. நான் வாய் திறந்து கேளாதபோதே அவர் இதெல்லாம் ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லையே” என்ற எண்ண மும் மகிழ்ச்சியும் பிறந்தன அவனுக்கு. இதைப்போலவே சாப்பாட்டு வசதியும் பிறவும் அவனுக்கு மிகுந்த திருப்தி தந்தன. ஆகவே, அடிப்படைப் பிரச்சினை களைப்பற்றிய கவலை இப்போதைக்கு இல்லை. முதல் முகாம் அமைத்தாயிற்று. இனி முன்னேறுவதற்கு வேண்டிய வழி இகைகளைப்பற்றி யோசிக்கலாம்' என்று முடிவுசெய்தான் அவன். மேஜை முன் அமர்ந்து மாதவன் என்னவோ எழுதிக் கொண்டிருந்தான். அந்த இடத்துக்கு அவன் வந்துசேர்ந்த மறுநாள். பிற்பகல் நேரம். பெரிய வீட்டார் அனைவரும் உண்ட கிறக்கத்தில் சொக்கிக் கிடக்கும் வேளை. . வாசலுக்கு வெளியே 'ஸார் மோர் இங்கிறதெல்லாம் இவர்தானக்கும்? என்ற இளம் குரல் எழுந்தது. மாதவன் இடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். யாரும் தென்படவில்லை. எனினும் அவன் அந்தப் பக்கமே பார்த்தபடி இருந்தான். சிறு நெற்றியும், அதன்மீது வந்து விழும் கிராப்புத் தை முடியும், குறுகுறுக்கும் கண் ஒன்றும்-முகத்தின் ஒரு பகுதி மட்டும்-எட்டிப் பார்க்கவே, மாதவன் புன்னகை புரிந்தான். படக் கென்று பின்வாங்கிக்கொண்டது. அந்த முகம். *.