பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ &g அவன் விளையாட்டுக் குரலில் உரக்கவே பேசினுன்: பார் பார் மத்திரமில்லே: மாயமில்லே! அருமையான வேலை. ஜோரான காட்சி, ஒரு பையன் வரப் போருன் பார். உள்ளே வத்து குதிக்கப் போருன் பார்!’ அடக்கமுடியாத சிரிப்பு பொங்கி வழிந்தது வெளியே. 'ஏஹே, பையனும்! பெண்ணைப்போயி பையன்னு சொல்ருர் டோய் இந்த வார் என்று கூவிக்கொண்டு வாசலில் வந்து கோலம் முழுதும் காட்டி நின்ருள் ஒரு சிறுமி. அவள் சிரிப்பு இன்னும் குறையவில்லை. 'இந்தப் பெண்ணின் தலைமுடியை வெட்டிவிடாமல் நீளமாக வளரவிட்டிருந்தால் அழகாக இருக்கும் என்ற நினைப்பே மாதவனுக்கு முதலில் எழுந்தது அந்த அழகு முகத்தைப் பார்த்ததும். கவுன் அணிந்து, முற்றிய நாகரிகத்தின் சிற்றுருவப் பதிப் பாக நின்ற அப்பெண் பல்லேக் காட்டினுள். சரியான அரிசிப் பல், பச்சரிசிமாதிரி என்று பேசியது அவன் மனம். நீ பாலச்சந்திரனின் தங்கச்சிதானே?’ என்று அவன் கேட்டான். ஏஹே, தங்கச்சியாம்! எனக்கு வயசு பதிமூணு ஆகுது. பாலுவுக்கு பதினெண்ணே முக்கால்தானே ஆகுது. நான் எப்படி தங்கச்சி ஆவேன்?’ என்று கைகொட்டிச் சிரித்த அச் சிறுமி அறைக்குள் வந்து ஒரு சுற்றுச் சுற்றி நின்ருள். "நீங்கதானே புது ஸார்? எனக்குத் தெரியுமே!’ என்று நீட்டினுள் அவள். ‘எப்படித் தெரியும்? தெரியும் என்று அழுத்தமாகக் கூறினுள் அவள். உங்க பேருகட எனக்குத் தெரியுமே!’

  • என்னவாம்?"

ஊகுங், சொல்லமாட்டேன்’ என்று உதடுகளே மூடிக் கொண்டு குட்டையான மயிர் வீசி ஆடப் பலமாகத் தலையசைத்தாள் சிறுமி.