பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் ஒளி 97 எத்தனையோ விலங்குகள் உயிர் இழந்து விட் டன என்ற எண்ணத்தின் அடிப்படையில் நமக்கும் அவற்றிற்கும் இடை ஓர் அன்புத் தொடர்பு ஏற்படுதல் வேண்டும். இவ்வெண்ணத் தின் அடிப்படையில் விலங்கினங்கட்கு நம்மால் இயன்ற நன்மையை நாம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும். துயருற்றுத் தவிக்கும் ஒரு புழுவோ பூச்சியோ உயிர் தாங்குமாறு ஒருவர் உதவுவார் ஆளுல், மாக் களுக்கு மக்கள் முன்னரே கடன்பட்டிருந்ததை ஒரளவு போக்குதற்கு ஒருவர் முயலுகிருர் என்பது கருத்து. மனிதன் நன்மைக்காக ஏதாவது ஒரு விலங்கு துயருற்றுப் பணியாற்றுகின்றது என்ருல், மக்கள் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அவ் விலங்கு துயருறுவதைப்பற்றி எண்ணிப்பார்க்க முன்வரவேண்டும். மாக்கள் துயர்ப்படுத்தப்படு வதை ஒருவர் வாளா பார்த்துக்கொண்டு செல்லா மல், நமக்கென்ன என்று இருந்துவிடாமல், அவ் வுயிர்களைக் காப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய முன்வரவேண்டும். ஒருவர் கண்ணே மூடிக் கொண்டுபோய்விட்டால், எதிரே உள்ள துய ரங்கள் நிகழவில்லை என்பது கருத்தாக மாட்டாது. மாக்கள் உலகம் மக்களாற் கொடுமைப்படுத்தப்படு கிறபொழுது, தாகம் உள்ள விலங்கினங்கள் தவித்துக் குரல் எழுப்புவதைக் கேட்பார் இல்லாத பொழுது, கசாப்புக்கடைக் கொடுமைகள் நிறைய உள்ளபொழுது, விலங்குகள் வேடிக்கைக்காகக் குழந்தைகளால் வதைபடும் பொழுது நாம் எல்லாம்