பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இருளில் ஒளி வராக உள்ளாரோ, அவ்வளவிற்கு அவ்வளவு உலகிற் பிறருக்கு அவர் கடமை உடையவர் என்ற எண்ணம் தோற்றுதல் வேண்டும். உழைப் பால், உடல் நலத்தால், மதிநலத்தால், இனிய இல்வாழ்க்கையால் சிறப்படைந்திருப்பவர்கள் பிற ருக்கு ஏதாவது ஒரு நன்மை செய்யவேண்டிய கடமை உடையவர்கள் என்பதை உணர்தல் வேண்டும்; தம்மை ஒத்த வசதி பெருதவர்கட்கு உதவவேண்டிய கடமை உண்டு என்பதை அவர் கள் உணர்தல் வேண்டும். இக்கருத்தும் இருளில் உழலுவோர்க்கு ஒளியளிக்கும் என்பது தேற்றம். பொருள் உடையவர்கள்தாம் பிறர்க்கு உதவ வேண்டும் என்பது கருத்தன்று. பொருள் இல்லா தவர்களும் தம்முடைய நேரத்தில், அல்லது தம் முடைய ஒய்வு நேரத்தில், ஒரு பகுதியைப் பிறர் நன்மைக்காகச் செலவிட முன்வருதல் வேண்டும். ஏதாவது ஒரு வகையில் மக்களொடு மக்களாகத் தாமும் வாழவேண்டும் என்ற உணர்ச்சி உலகின ரிடைப் பெருகுதல் வேண்டும். ஒருவர் சிந்தித்துப் பார்ப்பாரே ஆயின், அவர் செய்யக் கூடிய பொதுப்பணி தானே விளங்கும். பொதுமக்க ருடைய நலங்கருதி ஒருவர் உழைக்கக்கூடிய வகைகள் உலகில் எத்துணையோ பல உள. துய ருற்ற எளிய மக்களும், நோய்ப்பட்ட ஏழை மக் களும், தவிக்கும் சிறுவர்களும் எத்தனையோ பேர் உதவி பெறக்கூடிய நிலையில் இருக்கிருர்கள். அழுக்காய் இருக்கின்ற இடங்களைத் துப்புரவாக்கி, மக்கள்.வாழ் சேரிகளை மகிழ்ச்சி நிரம்பிய ஊராக்கக்