பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இளமை - பள்ளிக்கூட வாழ்க்கை தோல்வியே உற்ருர். முதலில், அச்சம் காரண மாகவும் வெட்கம் காரணமாகவும் சுவைட்சர் பாட முடியாமல் இடர்ப்பட்டார். அவரை இசை வகுப் பில் வைத்துக்கொண்டிருப்பது வீண் என்று ஆசிரியர் கருதியதற்கு மாருக, சில வாரங்களில் ஆசிரியர் வியக்கும்வண்ணம் சுவைட்சர் முன் னேற்றம் அடைந்தார். நாளடைவிற் கோயிலுக்கு அழைத்துப் போய், அங்குள்ள இசைக்கருவிகளை வாசிப்பதற்குக்கூட ஆசிரியர் வசதி செய்து தந் தார். இசையாசிரியர் மஞ்சு (Munch) என்பார் கோயிலில் இசை இசைக்க முடியாத நேரங்களில், சுவைட்சரைத் தமக்குப் பதிலாக இசைப்பதற் கெனத் தேர்ந்தெடுத்து அனுப்பினர். சுவைட் சருக்கு உள்ள இசை ஆர்வமும் இசை ஆற்றலும் வெளிப்படத் தொடங்கின. வரலாறும் இலக்கியமும் சுவைட்சருக்கு உகந்த பாடங்கள். உயிர் நூலிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. கணக்கு ஒன்றுதான் அவருக்குக் கடுமையான பாடம். (பதினெட்டாது வயதில் சுவைட்சர் மல் ஹாசன் பள்ளிக்கூடத்திலிருந்து விடை பெற்ருர், தேர்வில் வெற்றிபெற்ருர். ஆயினும், எதிர்பார்த்த படி நிரம்பிய மதிப்பெண்களோடு அவர் வெற்றி பெறவில்லை. தம்முடைய மாமன் மாமியருக்கு உளமுவந்த நன்றியயைத் தெரிவித்துக்கொண்டு, அவர் தாய் தந்தையர் இருக்கும் இடஞ் சென்ருர். அவர் தேர்ச்சியில் வெற்றியோடு திரும்பியது குறித்துப் பெற்றேர்கள் மகிழ்ந்தார்கள். எனி அம், சுவைட்சர் மனத்தில் ஏதோ ஒரு துயரம்