பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பல்கலைக் கழகம் சுவைட்சர் நாளடைவில் ஒரு புத்தகம் எழுதுதல் வேண்டுமென்று குறிப்பிட்டார். அதற்குக் கார ணம் விடார் என்னும் பேராசிரியர்க்குப் பாக் பாடல்களின் பண்கள் தெரியாமை அன்று; அப் பாடல்களில் அமைந்த சொற்களின் பொருள் நன்கு விளங்காமை. அப்பாடல்கள் செர்மன் மொழியில் இயன்றவை. விடாரோ பிரஞ்சு மொழி யில் வல்லவர். பிரஞ்சு மொழியும் செர்மன் மொழியும் ஒருங்கே அறிந்திருந்த சுவைட்சர் பாக் பாடல்களை நன்ருகச் சுவைத்தார். சொல்லின் பொருளை நன்ருக அறிந்ததால் அன்ருே பண் ஆணும் பயன்பட்டது என்பதை விடார் ஆகிய தம் ஆசிரியர்க்குச் சுவைட்சர் ஒரு நாள் விளக்கினர். அப்பொழுதுதான், பாக் என்பாரின் செர்மன் இசைப்பாடல்களைப்பற்றி ஆராய்ந்து சுவைட்சர் ஒரு நூல் எழுதுதல் வேண்டுமென்று விடார் கூறினர்.) (பாரிசில் இருந்த பொழுது, மெய்ந்நூலிலும் நல்ல ஆராய்ச்சி செய்து, காண்ட் என்ற மெய்ந் நூற் பேராசிரியரைப் பற்றி விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி ஸ்டிராஸ்பர்கு பல்கலைக் கழகத் திற்குச் சுவைட்சர் தந்தார். அதனை ஏற்றுக் கொண்டபின், அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக் கப்பட்டது. இப்பட்டம் அவருடைய இருபத்து நான்காவது வயதிற் கிடைத்தது என்பது குறிப் பிடத் தக்கது. அவ்வாண்டில்தானே ஸ்டிராஸ்பர் கில் உள்ள அர்ச். நிக்கலஸ் கோயிலிற் போதக ராக அவர் நியமிக்கப்பட்டார்; அடுத்த ஆண்டு