பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 போர்க்காலம் உன்னியுன்னி, அம்மலையில் உள்ள வெள்ளையரும் நீக்ரோவரும் மிகவும் வருந்தினர். பண்பு நிரம்பிய வராகச் சொல்லிக்கொள்ளும் வெள்ளையர்கள் ஒருவர் ஒருவரோடு போரினல் இகலுவார்கள் என்பதை நீக்ரோவரால் நம்ப முடியவில்லை. போரிலே பலர் கொல்லப்பட்டார்கள் என்பதை அவர்கள் முதல் நாள் கேள்வியுற்றதும், அவர்கள் கூறியதை நினைத்தால், ஒருவகையில் அவர்களது . கருத்து நல்ல கருத்து என்பது போலத் தோற்றும். பொதுவாக, கொல்லப்படும் ஒவ்வொரு மனிதனுக் காகவும் நட்ட ஈடு செய்யவேண்டும் என்பது அவர் களுடைய இனப் போர் மரபு. பலர் கொல்லப் பட்டார் என்ருல், எவ்வளவு பெரிய நட்ட ஈட்டினைச் செய்தல் வேண்டுமே என அவர்கள் கருதினர்கள். இக் கருத்து பொதுவாக, போரினை மேற்கொள்ளுதற்குத் தடையாக உதவக்கூடிய கருத்து ஒன்றன்ருே? மூன்று மாத காலத்திற்குள் இசை ஆசிரியர் விடார் என்பாரின் பரிவுரையால், சுவைட்சரும் அவர் மனைவியும் வீட்டைவிட்டு வெளியே சென்று, மருத்துவ மனையில் வேலை பார்க்கலாம் என்ற நிலை வந்து எய்தியது. 1915-இல் லோபஸ் முனையின்கண் தமது மனைவியின் உடல்நலம் கருதித் தங்கியிருந்த பொழுது, ஒருநாள், ஆற்றிற் படகுப் பிரயாணம் செய்யவேண்டியவர் ஆயினுர் சுவைட்சர். ஆற் றின்கண் படகில் எதிரேறிப் பிரயாணம் நெடு நேரம் செய்துகொண்டிருந்தபொழுது, துடுமென