பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்காலம் 43 கொண்டிருந்த புத்தகத்தின் கையெழுத்து ஏட்டைக்கூட எடுத்துச்செல்ல அவர் அனுமதிக்கப் படாததால், அதன் சுருக்கம் ஒன்றினை விரைவில் எழுதிக்கொண்டு புறப்பட்டார். பிரான்ஸ் தேசத் திற்குப் புறப்பட்டுக் கப்பலிற் செல்லும்பொழுது, மற்ற பிரயாணிகளொடு அவர் பேசுதல் கூடாது என்றும் பணிக்கப்பட்டிருந்தார். பாக் இசைப் பாடல்கள் சில மட்டும் எழுதப்பட்டிருந்த கை யெழுத்துத் தாளினை எதிரே வைத்துக்கொண்டு, அப்பாடல்களை மனப்பாடம் செய்தற்குமட்டும் அவர்க்கு வாய்ப்பு கிட்டிற்று. அந்த இசைப்பாடல் களை நாவில்ை இசைத்துக்கொண்டே, வெறும் மேசையைப் பண்ணிற்கு ஏற்பக் கைவிரல்களிளுல் அமைதியாகத் தட்டிக்கொண்டிருந்தார். லாம்பரீ னில் அமைந்த பியானேவைக் காலால் அமுக்கிக் கொண்டிருந்ததை எண்ணிக்கொண்டு, கப்பலிலும் அவ்விசைப் பாடல்களைப் பாடும்பொழுது தரை யைத் தடவிக்கொண்டிருந்தார். கரை ஏறிய பிற் பாடுகூட, அவர் மூன்று மாதம் காவலில் வைக்கப் பட்டிருந்தார். அவ்விடத்தில் அவரோடு காவலில் வைக்கப்பட்டிருந்த தம்மை ஒத்த பிறருடைய உள நிலைகளைப் பற்றி ஆராய்ந்து அறிந்துகொள்ளு தற்கு அச்சிறையகம் அவருக்குப் பயன்படுவ தாயிற்று. சிற்பிகள் சிலரையும், உழவர்கள் சிலரையும் அச்சிறையகத்துக் கண்டு, அவர் நிலை பற்றி உன்னுதற்கு இப்பொழுது அவர்க்கு வாய்ப்பு கிட்டிற்று. தத்தம் கருத்தில் தோன்றும் அரிய உருவங்களைக் கல்லிற் ச்ெதுக்கும்போது, மெய்த் 4450–4 -