பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்க்காலம் 47 அங்குள்ள மக்கள் மருத்துவர் விரைவில் வர வேண்டும் என அழைத்தவண்ணம் இருந்தனர். எடுத்துச் செல்லுதற்காக மருந்துப் பெட்டிகள் செப்பம் செய்யப்பட்டன. அவர் மனைவி தக்க உடல்நலத்தொடு அவ்வேளையில் இன்மையின், இம்முறை அவர் உடன் செல்லவில்லை. ஆக்ஸ்போர்டு மருத்துவ மாணவர் ஒருவர் மாத்திரம் சுவைட்சரொடு செல்ல முன்வந்தார். பெரிய தத்துவ ஞானி, பேரிசை அறிஞர், பேருரையாளர் என்ற சிறப்புக்களை எய்தியுள்ள சுவைட்சர் ேேராப்பா தமக்கு அளிக்கவிருக்கும் சிறப்புக்களை யும் இன்பங்களையும் விட்டுவிட்டுக் கடும் வேலை செய்வதற்காக, பிறர்க்காக உழைப்பதற்காக, மீண்டும் காட்டோரம் மலையோரம் செல்லலுற்ருர். சுவைட்சர் பட்டிருந்த கடன்கள் சிலவற்றை அடைப்பதற்கு உரிய பணம் அவருடைய இசை யரங்குகளாலும் விரிவுரைகளாலும் கிடைத்தது. மேலும், தம் மனைவியையும் அருங் குழந்தை ரீளுவையும் (Rena) விட்டுவிட்டுப் போவதனல், அவர்களுடைய வாழ்க்கைக்கு உரிய அளவு பணத் தையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் போதற்கு உகந்த வகையிற் பணம் சம்பாதித்துவிட்டார். சுவிட்சர் லாந்து, ஸ்வீடன், டென்மார்க்கு, செக்கோஸ்லோ வாகியா, இங்கிலாந்து முதலிய தேசங்களில் உள்ள மக்கள் அவர் கேட்ட வண்ணம் பணம் அளிக்க முன்வந்தமை போற்றுதற்கு உரியது. 1924 பிப்ரவரி மாதத்தில் அவர் சொந்த ஊரை விட்டு, மறுபடியும் ஆப்பிரிக்காவிற்குப் புறப்படுதற்கு