பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மன்னுயிர்க்கு அன்பு வேண்டும். அவற்றில் நூற்றுக்கு இரண்டு பங்கு தான் கிடைத்தது. மீண்டும் மீண்டும் உணர்ச்சி குன்ருமல், அவர் வெவ்வேறு இடங்களுக்குப்போய் ஒலைக் கற்களைக் கொண்டுவந்து சேர்த்தார். சில நேரங்களில் நோயாளர்களிடம் ஒலைக் கற்கள் கொண்டு வந்தால் அன்றி, மருத்துவம் செய்ய மாட்டேன் என்றுகூடக் கூறிஞர். அவர் அன்பு நிறைந்தவர் என்பதை அவர்கள் அறிந்தவர்கள் ஆனதால், டாக்டர் சொல்லை மெய்யென்று நம்பி ஒடுகளைக் கொண்டு வந்து அவர்கள் தந்தார்கள் அல்லர். டாக்டர் சுவைட்சரும், அவருடன் ஆக்ஸ்போர்டிலிருந்து வந்திருந்த மருத்துவ மாணவர் நோவல் (Noel) என்பாரும் தங்கள் கையாலேயே கொத்தர் வேலையையும் மருத்துவர் வேலையையும் ஒருங்கு பார்த்தனர். நோயாளிகள் சிலர் நோயினின்று நீங்கியவுடன் செல்லுதற்கு இடம் இல்லாமல்,டாக்டரிடமே வேலையில் அமர்ந்து விட்டனர். அவ்வாறு தச்சர்கள் சிலரும் கொல்லர் கள் சிலரும் கிடைத்தார்கள். சூலை 18-ஆம் தேதி ஸ்டிராஸ்பர்கிலிருந்து கோட்மன் (Kottmann) என்ற தாதி ஒருவர் வந்து சேர்ந்தார். பழைய சோசப் திரும்பவும் இப்பொழுது வேலைக்கு வந்தார். எனினும், நோவல் ஆக்ஸ்போர்டுக்குத் ரும்பவேண்டிய காலம் விரைவில் வந்துவிட்டது. அ க்டோ பர் மாதத்தில் டாக்டர் நெஸ்மன் (Dr. Nessmann) storp மருத்துவர் சுவைட் சருக்கு உதவியாக வந்து சேர்ந்தார். சுவைட் சரைப் பெரிய டாக்டர் என்றும், நெஸ்மனைச்