பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மன்னுயிர்க்கு அன்பு வில்லை; முழுக்கிராமம் போலவே காணப்பட்டது. மருத்துவ மனைக்கு நாடொறும் வந்து திரும்பும் நோயாளிகளின் ஆலோசனை அறை டாக்டருடைய வீட்டைக் காட்டிலும் உயரமுடையதாய் இருந்தது. இருநூற்றைம்பது நோயாளர்கள் படுத்திருந்து சிகிச்சை பெறுதற்கு வசதிகள் செய்து தரப் பட்டன. அந்த நோயாளர்களிற் பலர் வயிற்றுக் கடுப்பு நோயில்ை வருந்தினர்கள். விரைவில் அந் நோயினைப் போக்கினர் சுவைட்சர். மேன்மேலும் வரக்கூடிய நோயாளர்கள் தங்குதற்குத் தக்க ஏற் பாடுகள் செய்துவிட்டும், தக்க மருத்துவர்கள் தாதி யர்கள் ஆகியோரை லாம்பரீனில் நிலைபெறுமாறு செய்துவிட்டும், டாக்டர் சுவைட்சர் 1927 சூலையில் தமது ஊர்நோக்கிப் புறப்பட்டார். ஊருக்குத் திரும்பும்பொழுது மன வருத்தத் துடனேயே சுவைட்சர் புறப்பட்டார். அவர் பிறந்த பொன்னுட்டைப் போல லாம்பரீன் அவர்க்கு இனிய நாடாகிவிட்டது. அதனின்று புறப்படுதல் என்ருலே அவர்க்கு வருத்தம் நிரம்பிற்று; அதற்கு மேல் ஆப்பிரிக்க நோயாளர்களை விட்டுப் பிரிதல் வேண்டுமே என்று கலங்கினர். 8ரோப்பாவிற் குத் திரும்பியவுடன் மனைவியையும் குழந்தையை யும் கண்டு மகிழ்ந்தார். நண்பர்கள் பலர் வந்து இன்னுரை கூறி வரவேற்ருர்கள். எனினும், அவர் ஊர்திரும்பி வருவதற்குள் தந்தையார் இறந்து பட்டனரே என்றும், அவரை மீண்டும் உயிருடன் காணவியலாதுபோயிற்றே என்றும் சுவைட்சர் கவன்ருர். உள்ளமும் எண்ணமும் லாம்பரீன்