பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னுயிர்க்கு அன்பு 57 தந்திகளும் உலகத்தின் பல திசைகளிலிருந்து வந்து குவிந்தன. கொலம்பியா ஒலிப் பதிவுக் கழகத்தினர் பாக் பாடல்கள் சிலவற்றைச் சுவைட் சரைக் கொண்டு பாடுவித்து ஒலிப்பதிவு செய்து கொண்டனர். அவ்யாண்டில், சுவைட்சர் மறுபடி யும் லாம்பரீன் சென்று, ஆறு மாதத்தில் மீண்டும் திரும்பினர். அவர் 1937-இல் ஆருவது முறையாக லாம்பரீனுக்குச் சென்ருர், முகத்திற் புன்னகை யுடன் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுச் சென் ருர் ஆயினும், அவர் உள்ளத்திற் பெருந்துயரம் இருந்தது என்பது அவரை அறிந்த நண்பர்களுக் குத் தெரியும். உலகப் போருக்குரிய அறிகுறிகள் தென்படத் தொடங்கிய காலத்தில்தான் அவர் லாம்பரீன் சென்றுகொண்டிருந்தார். 1939-முதல் 45 வரை நடந்த உலகப்போர் நடப்பதற்குரிய அறிகுறிகள் கானுந் தறுவாயில் அவர் ஆப்பிரிக்கா சென்றுகொண்டிருந்தார் ஆதலால், உலக நாடுகள் ஒன்ருேடொன்று போர் தொடுக்கின்றனவே என்ற எண்ணத்தினுல் நைந்து உருகினர். 1937-இல் லாம்பரீன் சென்றவர் 39-இல் ேேராப்பாவிற்குத் திரும்பினர்.

  • உலகிற் பெரும்போர், உலகைப் பெறும்போர் உலகின் உரிமை உறிஞ்சும் கொடும்போர் மூண்டது மூண்டது மூண்டது'

என்று பாரதிதாசன் பாடியதுபோல அப்போர் மூண்டது, மூண்டது. ஆதலால், வந்த கப்பலில்தானே ஆப்பிரிக்காவிற்கு உடன் திரும்பிவிட்டார் சுவைட்சர். ேேராப்பாவிற் பெரும்போர் காரண