பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வயது முதிர்ந்த நிலையில் றனர். கத்தி அறுத்துச் சுடுதற்கு உதவிய கத்தி; ஆளைக் குத்தி அழித்தற்கு உதவுங் கத்தி அன்று. அவர் கைகள் வாளும் சம்மட்டியும் எடுத்து எடுத் துக் காழ்த்துப் போனவை. அந்த வாள் போருக்கு உரிய வாள் அன்று; மக்களிடம் வைத்த நாருக் குரிய வாள். அக்கைகள்தாமே இசைக் கருவிகளை யும் இனிமையில் இயக்கிய கைகள் என்பதை அறிந்து உலகம் மகிழ்கிறது. கையெழுத்து இலக் கணம் அறிந்த ஒருவர், அவர் இன்னர் என்று அறியாமலே அவருடைய கையெழுத்தைப்பற்றி ‘' சர்வாதிகாரி ஒருவருடைய கையெழுத்து இது ' என்று ஒரு நாள் கூறினர். அவரை ஒருவிதத்திற் சர்வாதிகாரி என்று கொள்வது பொருந்துவது தானே? அவர் முன்னியதைச் செய்துமுடிக்கும் முழு வீரர் ஆதலால், அவரைச் சர்வாதிகாரி என்று சொல்வது பொருத்தமுடைத்து என்று அவருடைய நண்பர்கள் சொல்லுகிருர்கள். சுவைட்சர் கையை வீசித் தெருவில் நடந்து செல்லும்போது பார்த்தவர்கள் ஓர் அரசர்போல நடப்பதாக அவரைப்பற்றிச் சொல்லுதல் உண்டு. தம் வாழ்நாள் முழுதும் ஏழை எளிய மக்களொடு வாழ்ந்து, அவர்களுக்காகவே உழைத்தவர் உலகப் பெருந் தலைவர்க்கு ஒத்த பீடு நடைகொள்வதில் என்ன வியப்பு! ஆயினும், நோயாளிமுன் அவர் குனிந்துநின்று, அவர்க்கு ஒன்று உதவும் நேரத் தில் அவரைப் பார்த்தால், அவர் கண்ணின் பார்வையிலேயே அவருடைய கவலை தோன்றுதல் உறுதி.