பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயது முதிர்ந்த நிலையில் 67 படுத்திருக்கும் இடத்திற்குப் போய் அவர்க்கு ஒரு நல்லுரைபகர்ந்து விட்டுத்தான் செல்லுவார். அவர் இரவில் வந்து தம்மிடத்தில் விடைபெறுவார் என ஒவ்வொரு நோயாளியும் அவரை எதிர்நோக்கி இருத்தல் உண்டு. இவ்வாறு நாடொறும் மருத்துவ மனை நிகழ்ச்சிகள் நிகழ்ந்து வருகின்றன. - ஆப்பிரிக்க மக்களிடைத் தோன்றிய குட்ட நோயினைப் போக்குதற்கு வழிகாணச் சுவைட்சர் முயன்ருர். அவருட்ைய அமெரிக்க நண்பர்கள் பலர் அவருக்கு உதவி செய்தனர். 1949 அக்டோ பர் மாதம் மீண்டும் அவர் லாம்பரின் சென்ருர். இரண்டு ஆண்டு கழித்து, அவர் பிரான்சிற்குத் திரும்பியபொழுது, அவரை வரவேற்பதற்குக் கூடிய மக்களின் பெருங்கூட்டம் அவரைத் திகைக்க வைத்துவிட்டது. அவருடைய இசை திசையெல்லாம் பரவி, நாட்டில் அடங்காதாகிவிட் டது என்றுகூடச் சொல்லுதல் இயலும். அவ ருடைய புத்தகங்கள் இருபது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டன. ஒருவராலும் கவனிக் கப்படாதவராகப் பலமுறை பிரஞ்சுதேச எல்லை யிலிருந்து இரயிலில் ஏறியும் இறங்கியும் முன்னர்ச் சென்றுகொண்டிருந்த சுவைட்சர் இப்பொழுது பத்திரிகையாளர்களுடைய பெருங்கூட்டத்தின ரால் வரவேற்கப்பட்டு வினுக்கள் எழுப்பப்படும் நிலை அடைவாராயினர். அவர் வரும் கப்பலை எதிர் நோக்கி, கடலினுள் வழிகாட்டும் படகுகளில் முன் கூட்டியே போய் அவரைக் கண்டு மகிழ்பவர்களும், நிழற்படம் எடுத்து விளம்பரம்படுத்துபவர்களும்