பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயது முதிர்ந்த நிலையில் 69 மாட்டுத் தாம் எவ்வாறு ஒழுகவேண்டும் என்ப தைச் சிந்திக்கத் தொடங்குவார் ஆகையால், நாளடைவில் அவர்கள் வேற்றுநாட்டு மக்களொடு ஒத்த இனத்தவராகவும் தோழராகவும் ஆகிவிடுதல் கூடும் என்ற முடிவிற்கு அவர் வந்தார். அவ்வழி: யில்ை மக்கள் கூட்டத்திற்குச் செய்யவேண்டிய தொண்டின் பொறுப்புவளர்ந்துவிடுதலை அச்சொற் பொழிவிற் சுட்டிக் காட்டினர். சீன தேசத்து லா-தசே, கான்பூசியஸ் (Confucius) முதலிய வர்கள் இம்முறையில் முன்னர்ச் சென்றிருத் தலை எடுத்துக் காட்டினர். ஏசுநாதரும், அருட் டிரு. பாலும் நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை வற்புறுத்தியுள்ளவாற்றையும் எடுத்துக் காட்டினர். இந்தியாவில் மக்கள் எல்லாம் உடன்பிறந்தவர்கள் என்று ஒருபுறம் சொல்லி, மறுபுறம் சாதிப் பிரிவுகளை வைத்து, மனிதனுக்கு மனிதன் எதிரே சுவர்கள் எழுப்பப்படும் பொல் லாத வழக்கத்தைப்பற்றிப் புண்பட்ட நெஞ்சம் உடையவராய்ப் பேசினர். இந்தியாவிற் பிறந்த யாவரும், பார்ப்பனரும், பறையரும், செல்வரும் வறியரும், அரசனும், ஆண்டியும் ஓரினம் என்ற எண்ணம் வலுக்கவேண்டும் என்று சுவாமி விவே காநந்தர் கூறியது சுவைட்சர் அறியாததன்று. கி. மு. ஏழாவது நூற்ருண்டில் சொராஸ்டர் (Zoraster) என்பார் மக்கள் எல்லாரும் உடன் பிறந்தவர்கள் என்பதை வற்புறுத்தியிருப்பதையும் விளக்கினர். கிரேக்க தேசத்திற் பெருங்குடிமக்கள் என்று கூறப்படுபவர்கள் பணி ஒன்றும் ஆற்றுதல்