பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வயது முதிர்ந்த நிலையில், அழுத்தமாக நம்பினர். ' நான் உயிர் வாழ விரும்பு கின்ற உயிர்; என்னைச் சுற்றிலும் உயிர் வாழ விரும்புகின்ற உயிர்களைக் காண்கிறேன். வாழ விரும்பும் எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான். என்னுடைய, உயிரிடத்தில் எனக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ அவ்வளவு மதிப்பு பிற உயிர்களிடத்தில் நான் வைக்க விரும்புகிறேன். பிற உயிர்களைப் பாது காப்பதும், அவற்றை வாழ விடுவதும், எட்டும் அளவு அவற்றை உயரமாக வளர வகைசெய்வதும் புண்ணியமாகும். உயிர்களை அழிப்பதும், அவற் றிற்குத் துயர் தருவதும், அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதும் எல்லாம் பாபம் ' என்று அவர் அப்பேருரையில் எடுத்துக் காட்டினர்: அன்பு என்பதைவிட ' உயிர்களின் தொழு தகைமை” என்பது மிக்க ஆற்றல் உடைத்து எனச் சுவைட்சர் கருதினர். அன்பு என்பது பிறர் மாட்டு நாம் காட்ட வேண்டியதொன்று என்ற அளவில் உள்ளது; நமக்கு நாமே செய்துகொள்ள வேண்டிய கடமையை அஃது உட்படுத்துவதில்லை. அதல்ை, 'அன்பு ” என்ற சொல்லிலிருந்து ஒருவர் உண்மை சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்துகொள்ளுதல் அரிது. ஆயினும், உண்மை யும் இரக்கமுமே முழு அறம் ஆகும். உயிர்கள் யாவும் தொழத்தக்கவை என்ற விழுமிய கருத்தால் ஒருவர் நெஞ்சு பொய்க்காமல், உயர்ந்த நேரிய நல்ல வகையில் பிற உயிர்களைப் பேணுதல் இயலும். உயிரின் தொழுதகைமையால் உலகத்து உயிர்