பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் ஒளி 93 பொருள்களொடு ஒன்ருகிக் கலந்து வாழவேண்டும் என்ற எண்ணத்தைப் பிறப்பிக்கும். இவ்வெண் ணத்தின் அடிப்படையில் உலக ஒற்றுமை தோற் றும். இதனைத்தான் 'இருளில் ஒளி' என்று சொல்லுதல் கூடும். உலகத்தில் துயர்ப்பட்டு இருக்கும் உயிர்களைக் காண்பதால், சுவைட்சர் பல வேளைகளில் அமைதி யற்றவராய் இருந்துள்ளார். எனினும், உயிர்களி னிடத்து அவர் வைத்துள்ள பெருமதிப்பினால் மனத்தின்கண் ஒரு பேரின்பம் பெற்றுள்ளார். ஒருவரையொருவர் அறிந்துகொண்டு, ஒருவர் குற் றங்களை ஒருவர் பொறுத்துக் கொள்வதால், உலகத் தில் எவ்வளவோ நன்மைகள் நிகழுதல் கூடும். ஒரு புழுவை அழிவினின்று ஒருவர் பாதுகாக்கின் ருர் என்ருல், ஓர் உயிர் வேருேர் உயிருக்காக உழைக்கிறது என்பது பொருள். அவ்வாறு பலர் பலர் உழைப்பாராளுல், வாழும் உயிர்வகைகள் ஒன்றற்கு ஒன்று பகையாக வேறுபிரிந்து நிற்பது முடிவடைந்துவிடும். ஒருவர் மற்ருேர் உயிரைப் பாதுகாக்க முயலும் முயற்சியில் கடவுளைக் காண் டல் கூடும். ஏனெனில், கடவுள் எல்லா உயிர் களிலும் இருக்கின்ருர் ஆதலால், ஓர் உயிருக்கு மற்ருேர் உயிர் உதவும்பொழுது, ஒன்று மற்ருென் ருேடு இயைகின்ற இணக்கம் உண்டாவது தெளிவு. அதல்ை, உயிர்ப்பொருள்கள் இத்தகைய கூட்டுற வால் கடவுளொடு ஒன்றுபட்டுவிடுதல் உண்டு என் பதை அறிதல் வேண்டும் எனச் சுவைட்சர் விளம் பினர். இதனை ' இருளின்கண் ஒளி' எனலாம்.