பக்கம்:மன ஊஞ்சல்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மன ஊஞ்சல் "ராக்கப்பன் என்னைத் துரக்கிக் கொண்டு போய் விட்டான்' என்று தங்கம் சொன்னவுடனே, "ஆ!' வென்று அலறிவிட்டாள் ராதா, "பயப்படாதே! நடந்தது முழுவதை யும் கேள்’’ என்று தங்கம் கூறினாள். அவள் பாதி கூறிக் கொண்டு வரும்பொழுதே, 'அந்தச் சூனியக்காரக் கூனற் கிழவியிடமிருந்தும், ஆவியுலகத்து ராக்கப்பனிடமிருந்தும் நீ எப்படித் தப்பி வந்தாய்?' என்று கேட்டாள் ராதா. "நடராசன் உதவியால்' என்று தங்கம் பதிலளித்ததும், ராதாவின் வியப்பு மேலும் பெருகியது. அதன் பிறகு நடராசன் தனக்கு எப்படி உதவி செய் தான் என்பதைத் தங்கம் விவரித்துரைக்க ஆரம்பித்தாள். "அந்த ராக்கப்பன் தன் ஒலைக் குடிசையில் என்னைச் சிறை வைத்து, அடிக்கடி வந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தினான். ஆனால், தான் ஒப்பி வராததைக் கண்ட அவன் என்னைப் பலவந்த மாகக் காட்டுப் பிள்ளையர் கோயிலுக்குத் துாக்கிக்கொண்டு போய் அங்கு தாலி கட்டிவிடுவதென்று முடிவு கட்டி விட்டான்' "ஆமாம், ஆவிகள் பிள்ளையார் கோயிலைக் கண்டால் பயப்படும் என்பார்களே!” என்று இடையிட்டுக் கேட்டாள் ராதா. அவன் ஆவியுமில்லை, பிசாசுமில்லை. நானும் உன்னைப்போல் தான் முதலில் அவனை ஆவியுருவமென்று எண்ணிப் பயப்பட்டேன். ஆனால் நடராசன் வந்த பிறகு தான் ராக்கப்பனும் ஒரு சாதாரண மனிதன்தான் என்பதைத் தெரிந்துகொண்டேன். சாயுங்காலம் அவன் என்னைத் தூக்கிக்கொண்டு போகும்போது அந்தப் பா ைத யா க நடராசன் சென்றுகொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் எனக்குச் சிறிது தைரியம் பிறந்தது. கூச்சலிட்டேன். என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/100&oldid=854202" இலிருந்து மீள்விக்கப்பட்டது