பக்கம்:மன ஊஞ்சல்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 91. கூச்சலைக் கேட்டுவிட்டு அவர் நெருங்கி வந்தார். சுன்னைத் தூக்கிச் சென்றதை அவர் கண்டுபிடித்தார். உடனே பாய்ந்து வந்து, அவனை வழி மறித்தார். அவன் என்னைக் கீழே இறக்கி வைத்துவிட்டு அவரோடு வாதாடினான். வார்த்தை தடித்து ஒருவரையொருவர் திட்டுவதில் முடிந்தது. திட்டுவது மாறி அடிதடியில் வந்து நின்றது. அவர் தன் ஒற்றைக்கையால் அவனை ஓங்கி ஒர் அறை அறைந்தார். அவன் சன்னம் கூவி வீங்கிப் போய்விட்டது. இருந்தாலும் அவன் மிகுந்த ஆக்கிரோஷத் தோடு அவர் மீது பாய்ந்தான். அவர் போராடிக்கொண்டே அவன் காலை இடறிவிட்டார். அவன் நிலை தடுமாறிக் கீழே விழுந்தான். அவன் பல் ஒரு கல்லில் மோதிச் சிதறுண்டு விழுந்தது. அவன் மயங்கிச் சோர்ந்து கீழே விழுந்தான். அவனைப்பற்றிச் சிறிதும் கவலைப் படாமல் அவர் என்னைத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்தார். நானும் இங்கு வந்து சேர்ந்துவிட்டேன். அவர் மட்டும் இல்லாவிட்டால்' என்று தங்கம் கூறியபோது, _ 'பாவம்! நீ பேய்க்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டி வந்திருக்கும்!” என்றான் ராதா. 'அவன் பேயல்ல! அவன்தான் அசல் ராக்கப்பன்!” என்றாள் தங்கம், ராதா வியப்புடன், "அப்படியானால், பேயாக இருக்கும் ராக்கப்பன் யார்?' என்று கேட்டாள். ராதா. 'துரக்கிலே தொங்கிச் செத்தவன் ராக்கப்பனல்ல. யாரோ அவனைப்போல் கொடுரமான உருவமுள்ளவன். குடும்பக் கவலை தாங்கமாட்டாமலோ, நல்ல மனைவி வாய்க் காமலோ அவன் துரக்குப் போட்டுக்கொண்டு செத்திருக் கிறான். அவன் செத்த நாளும், ராக்கப்பன் இந்த ஊரை விட்டு வெளியூருக்குப் பிழைக்கச் சென்ற நாளும் ஒன்றாக இருந்திக்கின்றன. ஆகவே, இறந்தது ராக்கப்பன்தான் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/101&oldid=854203" இலிருந்து மீள்விக்கப்பட்டது