பக்கம்:மன ஊஞ்சல்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - மன ஊஞ்சல் ஊாரர் முடிவு கட்டிவிட்டார்கள். ராக்கப்பனுடைய ஆவிக்கு அவனுடைய தீயகுணங்களையெல்லாம் ஏற்றிச் சொல்லி விட்டார்கள். "அப்படியானால் நடராசன் சொன்ன தெல்லாம் உண்மைதானா? பேயென்பது, வீண் மனப் பிராந்திதானா?" என்று கேட்டாள் ராதா 'சந்தேகமில்லாமல்' 'தங்கம், நீ நடராசனைப்பற்றி என்ன நினைக்கிறாய்!” ‘‘பைத்தியமல்ல-பகுத்தறிவுவாதி.என்று எண்ணுகிறேன்' "அதைக் கேட்கவில்லை தங்கம். உனக்கு அவரைப்பற்றி என்ன தோன்றுகிறது?’’ ‘'தோன்றுவதற்கு என்ன இருக்கிறது? நல்லவர்! அழகானவர்! ஆனால் அந்தக் கை மட்டும் ஒழுங்காக இருந் திருந்தால்... ' என்றாள் தங்கம். 'கை மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால். என்ன செய்வாய்?" என்று கேட்டாள் ராதா. தங்கம் பேசாமலிருந்தாள். அவள் உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. - தங்கத்திற்கும், நடராசனுக்கும் முடிச்சுப் போடப் பேச்சு நடந்ததெல்லாம் ராதாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தங்கத்திற்கு நடராசனுடைய பைத்தியக்காரத் தனமும், முடம்பிடித்த கையும் பிடிக்கவில்லை; அதனால் திருமணம் நடக்கவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். 'தங்கம். நானாயிருந்தால், அவர் கை ஒழுங்காக இல்லாததற்காக அவரை வேண்டாமென்று ஒதுக்கிவிட மாட்டேன்,' 'என்ன? என்ன? உண்மையாகவா?’ என்று அவளை உற்று நோக்கினாள் தங்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/102&oldid=854204" இலிருந்து மீள்விக்கப்பட்டது