பக்கம்:மன ஊஞ்சல்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 93 "ஆம்" என்பது போல் நாணிக் கோணிக் குனிந்து கொண்டாள் ராதா. அவளுடைய முகத்திலே செம்மை படர்ந்திருந்தது. தங்கம் அவளைக் கூர்ந்து நோக்கினாள். சிறிது நேரத் திற்குப் பிறகு, "ராதா, உண்மையாகத்தான் சொல்கிறாயா? அந்த ஒற்றைக்கையரை உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டாள். அவள் கேள்வியில் கேலியோ, கிண்டலோ இல்லை என்பது நிச்சயம். ஆனால் ஏதோ ஒர் உள்ளுணர்ச்சி ராதா அவனைக் காதலிக்கிறாளா என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை அவளுக்கு ஏற்படுத்தியது போவிருந்தது. ராதா அவளுக்கு எதுவும் பதில் சொல்லவில்லை. பேசாமல் எழுந்து தங்கம், நான் போய் வருகிறேன்.” என்று சொல்லிவிட்டுத் தோட்டத்துப் பாதை வழியாகவே தன் வீட்டுக்குப் போய்விட்டாள். உண்மையில் அவள் நடராசனைக் காதலிக்கிறாளா அல்லவா என்று தெளிவாகத் தெரிந்துகொள்ளத் தங்கத் தால் முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/103&oldid=854205" இலிருந்து மீள்விக்கப்பட்டது