பக்கம்:மன ஊஞ்சல்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ID6 or ஊஞ்சல் 12. உணர்ச்சிக் குழப்பம்! உலகப் பழி என்பது இருக்கிறதே, அதற்குப் பயப்படா தவர்கள் மனிதரல்ல. இந்த உலகப் பழியைப்பற்றி அறிஞர் களிடையே மட்டுமல்லாமல் மக்களிடையேயும் கூட இரு வித மான கருத்துக்கள் நிலவுகின்றது. உலகம் பழிக்கும் என்பதனால்தான் இன்று உலகத்தில் ஓரளவு யோக்கியத் தன்மையும். நல்ல பண்பும் நாகரிகப் போக்கும் நிலவுகிறதென்று சொல்ல வேண்டும். இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கடவுளுக்குப் பயப்படுகிறவர்கள் கூடத் தீமைபுரிவதற்கு அஞ்சுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் தீயதொரு காரியத்தை அல்லது கள்ளச் சந்தை வியாபாரத்தைக்கூட, வெற்றிகரமாக முடித்துத் தரும்படி கடவுளுக்குப் பூசை போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறார்கள். ஆனல், உலகத்துக்குப் பயப்படு கிறவர்கள் அப்படியல்ல, எங்கே தான் செய்கிற காரியம் வெளிக்குத் தெரிந்துவிடுமோ? தெரிந்து விட்டால், வெளியே தலை காட்டமுடியாதே என்று அஞ்சி நடுங்குகிறாகள், தன் முரட்டுத்தனத்தால் மற்றவர்களை அரட்டி மிரட்டும் தன்மை வாய்ந்த குண்டனாக இருந்தாலும் சரி, தன் பணப் பெருக்கால் எதையும் திரைபோட்டு மறைத்துவிடலா மென்று எண்ணுகிற முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவனா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/104&oldid=854206" இலிருந்து மீள்விக்கப்பட்டது