பக்கம்:மன ஊஞ்சல்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 95 யிருந்தாலும் சரி, தன் பதவி அதிகாரத்தால் எதுவும் வெளி வராதபடி செய்துவிடக்கூடிய வசதியுள்ளவனாகவிருந் தாலும் சரி, தன் ஆணவம், அதிகாரம், செல்வம் எல்லா வற்றையும் கடந்து எங்கே தன் தீய செயல் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து நடுங்குகிறான். எப்படிப்பட்டவன் எவ்வளவு மறைமுகமாக ஒரு கொடுமையையோ, தீமையையோ செய்தாலும் அது எப்படியும் வெளிப்பட்.ே தீரும். உலகம் எதையும் நெடு நாளைக்குத் தன்னகத்தே அடைத்து வைத்திருக்காது. அது உலக இயற்கை, பூமியின் வயிற்றில் தங்கமோ. நிலக்கரியோ வைமோ புதைந்து கிடந்தாலும் கூட அதுவும் ஒரு நாள் வெளிப்பட்டுவிடுகிறது. வையகத்தின் குடலுக்குள்ளே ஒடிக் கொண்டிருக்கும் நெருப்புக் குழம்பு என்றாவது ஒரு நாள் எரி மலைவாயிலாக வெடித்துக் கிளம்பத்தான் செய்கிறது. எதையும் என்றும் அடக்கி மறைத்துக் காக்காத இயல் புடையது இவ்வுலகம். இந்தச் சடப் பொருள்கள் மட்டுமல்ல, காற்றில் இருக்கின்ற ஒவியணு மாத்திரமாக உள்ள இரகசியங்களும் கூட இந்த விதிக்கு-இயற்கைக்கு விலக்கானவையல்ல. அவையும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். யாரும் காணாத இடத்திலேயிருந்து தன்னந் தனியாகவே ஓர் அக்கிரமத்தைச் செய்து முடித்தவன்கூட என்றாவது ஒரு நாள் அந்த இரகசியச் செய்தியைத் தன் நெஞ்சிலே புதைத்து வைத்திருக்கமாட்டாமல் வெளியிட்டு விடுவான். அந்தக் கொடுமையின் இரகசியம் சிறிது வெளிப்பட்ட உடனேயே உலகம் அவனைப் பார்த்தும் பார்க்காமலும் பழிக்கத் தொடங்கிவிடும். ஆகவே தான், நல்லறிவு மிக்க சான்றோர்கூட உலகப் பழிக்கு மிகவும் பயப்பட்டார்கள்; பயப்பட்டு வருகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/105&oldid=854207" இலிருந்து மீள்விக்கப்பட்டது