பக்கம்:மன ஊஞ்சல்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மன ஊஞ்சல் நல்லவர்கள் உலகப் பழிக்கு ஏன் பயப்பட வேண்டும் என்னும் போதுதான் நாம் அந்த உலகப் பழியைப் பற்றிய இரண்டாவது கருத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக் கிறது. சில சமயம் இந்த உலகப் பழி அடிப்படையே இல்லாமல் ஏற்பட்டு விடும். பனைமரத்தின் கீழிருந்து பாலைக் குடித்தாலும் அது பாலென்று நம்பாது இந்த உலகம். பார்! பார்! இவனைப் போய் நல்லவனென்று எண்ணிக் கொண்டிருந்தோமே, இப்போதல்லவா தெரிகிறது இவன் வண்டவாளம்' என்று பழிக்கத் தொடங்கிவிடும். இதற்காகத் தான் கண்ணால் கண்டதும் பொய்; காதால் கேட்டதும் பொய்; தீர விசாரித் தறிவதே மெய்' என்று சொல்லுகின்ற வழக்கும் ஏற்பட்டது. ஆனால், உலகம் அப்படித் துப்பறியும் வேலையில் ஈடுபட்ட பிறகா தன் பழிவாயைத் திறக்கிறது? "நான் பார்த்தேன் அவனும் அவளும் ஒன்றாக இருந்ததை, என்று ஒருவர் சொல்ல, அவளை அழைத்தது நன்றாக என் காதில் விழுந்தது என்று கூட இருப்பவர் கூற உலகத்திலே யோக்கியன் என்று சொல்லத் தகுதி வாய்ந்தவன் யாருமே கிடையாது என்று மூன்றாமவர் முடிவு கட்டி விடுவார். இப்படியாக ஒருவனைப் பற்றிய பழிச்சொல் எவ்விதமான உண்மை ஆதாரமு மின்றியே ஒன்றுக்குப் பத்தாகப் பத்துக்கு நூறாக வளர்ந்து பெருகிவிடும். இந்த உலக இயல்பைக் கண்டு தான் மிக உயர்ந்த ஒழுக்க நெறியில் வாழ்க்கை நடத்தும் பெரி யோர்கள், எங்கே தங்களை உலகம் தவறாகப் புரிந்து கொண்டு பழிக்கத் தொடங்கிவிடுமோ என்று எப்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஒரு முறை உலகப் பழிக்கு ஆளாகிறவன் அந்தப் பழியைத் துடைத்துக்கொள்வதென்பது மிகவும் அரியசெயல். எவ்வளவுதான் அவன் உண்மை விளக்கங்கள் கூறினாலும் அவற்றை நிலைநாட்டுவது அரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/106&oldid=854208" இலிருந்து மீள்விக்கப்பட்டது