பக்கம்:மன ஊஞ்சல்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் . - 97 சான்றோர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் கூடச் சமயத்தில் உலகப் பழிக்கு இலக்காகி விடுகிறார்கள் என்று சொன்னோமல்லவா அந்தக்கதி நமது தங்கத்திற்கும் ஏற்பட்டது. தங்கமான பண்புடைய தங்கத்துக்கா இந்தப்பழி? பழிக்கப்படும்படி அவள் என்ன செய்தாள்? இது என்ன அநியாயம்? இந்த உலகத்தில் நீதியேயில்லையா? உண்மைக்கு இங்கே இடமேயில்லையா? என்று உங்கள் உள் ள ம் துடிக்கலாம். உங்களுக்கு மட்டுமல்ல, கந்தசாமி வாத்தி யாருக்கும், மரகத அம்மாளுக்கும் கூடத்தான் இந்தப் பழிப் பேச்சு காதில் விழுந்தபோது இந்த மாதிரியான ஆத்திரம் ஏற்பட்டது: அவர்களுக்கு நன்றாகத் தெரியும், தங்கத்திற்கு முருகேச வாத்தியாரின் பிள்ளை நடராசன் மீது சிறிதுகூடக் காதல் கிடையாது என்று ஆனால் அந்த நெய்யூர் முழுக்க, நேரில் கண்டது போல் என்ன பேசிக்கொண்டார்கள் தெரியுமா? . தங்கத்திற்கும் நடராசனுக்கும் காதல் உண்டாகிவிட்டது. நடராசன் அவளைக் கூட்டிக்கொண்டு ஒடிப்போய்விட்டான்; ஆனால் விஷயமறிந்ததும் பயந்துபோய்த் திரும்பவும்கூட்டிக் .ெ கா ன் டு வந்து விட்டுவிட்டான். இப்படித்தான் ஆங்காங்கே கணவனும் மனைவியும், அத்தானும் மச்சானும், அண்ணியும் நாத்தியும், நண்பர்களும் தோழர்களும் தத்தமக் குள்ளே பேசிக்கொண்டார்கள். "தங்கமா? சே! சே! அப்படி யிருக்கவே யிருக்காது. நான் நம்பவே மாட்டேன்' என்று யாராவது மறுத்துச் சொன்னால் 'உள்ளதுதான்! தங்கம் நல்ல பெண் தான். ஆனால், வயதையும் பருவத்தையும் யோசித்துப் பார்த்தாயோ? பஞ்சும் நெருப்பும் ஒன்றாய். இருந்தால் என்ன ஆகும்?' என்று கேட்டு அடித்துச் சொன்னார்கள் பேச்சைத் தொடக்கியவர்கள். un –7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/107&oldid=854209" இலிருந்து மீள்விக்கப்பட்டது