பக்கம்:மன ஊஞ்சல்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மன ஊஞ்சல் எப்போதும் பழி கூறுபவர்கள் தங்கள் கூற்றை மெய்யாக்கிக் காட்டமுயல்வதும். அதைக் கேட்பவர்கள் கடைசியில் உண்மையென்று தம்பி விடுவதும்தான் வழக்கம்: அப்படி நம்பாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் பெரிய ஞானிகளாகத்தான் இருக்க வேண்டும். தங்கத்தைப் பற்றி ஊரார் பேசிக் கொண்டதையும், பழி தூற்றியதையும் கேட்டுக் கந்தசாமி வாத்தியார் துடித்தார். மரகத அம்மாளோ வாய்விட்டு அழமாட்டாமல் அடுப்படி மூலையிலே குந்திக் கொண்டு ஒரே கவலையாக உம் மென்று இருந்தாள். தங்கத்தின் காதில் முதன் முதல் இந்தச் செய்தி விழுந்தபோது அவளுக்குச் சிரிப்பாக இருந்தது. நெய்யூர்க்காரர்கள் எல்லோருமே கற்பனைக் கதை எழுது வதற்கு மிக மிகப் பொருத்தமானவர்கள் என்று அவன் எண்ணினாள். ஆனால், வர வர அந்தப் பேச்சு வளர்ந்து எங்கும் பரவிய போக்கினைக் கண்டபோதுதான். அது எவ்வளவு தூரம் தன் மானத்தைப் பாதிக்கக் கூடிய ஆற்றலுடையதாயிருக்கிறது என்பதை உணர்ந்தாள். ஊர்ப்பழி என்று ஒன்று ஏற்பட்டு விட்டால், அது காதலர் இருவருக்கிடையேயும் உண்டாகிய காதலை மேன் மேலும் வளர்க்கும் என்று சொல்லுவார்கள். அந்தக் காதலுக்கு ஊர்ப் பழியே உரமாக அமையும் என்று கூறு வார்கள். ஆனால் தங்கம் தான் நடராசனைக் காதலிக்க வில்லையே. காதலித்தால் அல்லவா அந்தக் காதல் வளரும்; அல்லது. ஊர் என்ன சொன்னாலும் அதை உறுதியோடு வளர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்? அவளுக்கு நடராசன் மீது ஏதோ ஒரு விதமான அன்பு இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அந்த அன்புக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/108&oldid=854210" இலிருந்து மீள்விக்கப்பட்டது