பக்கம்:மன ஊஞ்சல்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 99 பேர் காதல் என்று அவள் நினைக்க வில்லை. நடராசனுடைய உருவத் தோற்றம் அவளுக்குப் பிடித்துத்தான் இருந்தது. அழகான அந்த உருவத்தை முதன் முதல் அவள் கண்ட போது பிரமித்துப் போனவள்தான். ஆனால், அவன் ஒரு பைத்தியக்காரன்: அதிலும் ஒரு கை முடவன் என்றறிந்த பிறகு அவளால் அவனைத் தன்னோடு உடன் வைத்து எண்ணிப் பார்க்கவே துயரமாக இருந்தது. பிறகு அவனுக்குப் பைத்தியம் தெளிந்துவிட்டது என்று கண்டபோது அவனைப் பற்றி அவள் நல்லெண்ணம் கொள்ள ஆரம்பித்தாள். அவனுடைய அறிவு மணம் கமழும் பேச்சுக்களைக் கேட்ட போது அவளுக்குத் தன்னையறியாமல் ஒரு பெருமை யுணர்ச்சிகூட உண்டாகியது என்றுதான் சொல்ல வேண்டும். அவனை யாரும் ைபத் தி ய ம் என்று பழித்தால் கூட அவளுக்குக் கோபம் வந்தது. ஆனால், அப்போதும் அவள் அவன் தன்னுடன் இணைத்துப் பேசப்படத் தகுதியுள்ளவன் என்று நினைக்கவில்லை. குறைபட்ட அவனுடைய கையைக் காணும்பொழுதெல்லாம் அல்லது நினைக்கும்பொழு தெல்லாம் அவனுக்கும் தனக்கும் எவ்விதமான பொருத்தமும் இல்லையென்றே அவள் எண்ணிவந்தாள். அவனுக்கும் தனக்கும் எவ்விதமான பந்தமும் ஏற்பட விரும்பாத அவளைப் போய் அவன்மீது ஆசைப்பட்டுக் கூட ஒடிப் போய்விட்டாள் என்று ஊர் பழித்துப் பேசியதை நினைத்துப் பார்த்தபோது அவளுக்கு முதலில் கிரிப்பாக வந்தது. போகப் போக எரிச்சலாக வந்தது. அதுமட்டும் உண்மையான காதலாக இருந்திருந்தால், ஊர் எவ்வளவுதான் பழித்திருந்தாலும் அவளுக்குத் தங்கள் இருவரையும் ஊரார் இணைத்துப் பேசுவது இன்பத்தைக் கொடுத்திருக்கக்கூடும். ஆனால், அவள் பேருக்குக்கூட தடராசன் மீது காதல் கொள்ள வில்லையே. அது அவளுக்கு இன்பத்தை எப்படித் தரும்? ஆனால், நடராசனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/109&oldid=854211" இலிருந்து மீள்விக்கப்பட்டது