பக்கம்:மன ஊஞ்சல்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

four ஊஞ்சல் 1. மகளே, உனக்குத் திருமணம்! தங்கத்திற்கு இந்தக் கார்த்திகை வந்தால் வயது இருபத்திமூன்று நிறைந்துவிடும். அவள் சடங்காகிப் பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்னும் கழுத்திலே மஞ்சள் கயிறு ஏறவில்லை. தங்கம் தங்கநிறம் தான்; அவள் குணமும் பத்தரை மாற்றுத் தங்கம்தான். ஆனால், அழகான பெண் என்பதற் காகவோ. நல்ல குணவதி என்பதற்காகவோ இக்காலத்தில் யாரும் கலியாணம் செய்து கொள்ள முன்வந்து விடுகிறார் களா என்ன? தங்கம் என்று சொன்னால் போதுமா? பெயர் இருந்தால் போதுமா? கையிலே எவ்வளவு தங்கம் இருக்கிறது என்று தானே எல்லாரும் பார்க்கிறார்கள். கந்தசாமி வாத்தியார், அவர்தான் தங்கத்தைப் பெற்ற புண்ணியவான், அவரிடம் தங்கமும் இல்லை வெள்ளியும் இல்லை. சேமிப்பு என்ற பெயரிலே செப்புக் காசுகள்கூட அவரிடமில்லை. அவரிடம் உள்ள தங்கமெல்லாம் அவர் மகள் தங்கம்தான். ஓர் தொடக்கப்பள்ளி வாத்தியாரிடம் என்னதான் இருக்க முடியும்? இந்தக்காலத்தில் எல்லோரும் சீர்திருத்தம் என்று பேசு கிறார்கள்! ஆனால், வாழ்வில் அதை யார் கடைப்பிடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/11&oldid=854212" இலிருந்து மீள்விக்கப்பட்டது