பக்கம்:மன ஊஞ்சல்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I00 மன ஊஞ்சல் பொறுத்த வரையில் அந்தப் பழி உண்மையில் அவன் நெஞ்சில் இன்பநீர் பாய்ச்சியது என்று தான் சொல்ல வேண்டும். நடராசன் சுத்தப் பைத்தியக்காரனாய் இருந்தபோதே அவன் மனம் தங்கத்தின்மேல் பதிந்துவிட்டது. அந்தப் பைத்தியக்கார நிலையிலும் அவன் தங்கத்தைத் தன் பெண்டாட்டியாக்கிக்கொள்ள விரும்பினான். அவ்வாறு ஆக்கிக்கொள்வதால் தனக்கு நன்மையுண்டென்று அவன் எண்ணினான். பிறகு பைத்தியம் தெளிந்து அறிவு வளர வளர அவன் தங்கத்தின்மேல் வைத்திருந்த மதிப்பு மேலோங்கியது. தங்கத்தைப்போல் ஒரு குணவதியை, அறிவுச் செல்வத்தை, அமைதிக் கடலை உலகத்தில் காண்பது அரிது என்று கருதக் கருத அவனுக்கு அவள் மேல் இருந்த அன்பும் வாஞ்சையும் அதிகமாயின. அவன் .ெ வ ளி யி லே காட்டிக்கொள்ளா விட்டாலும், தங்கத்தைப் பார்க்கப் போகிறோம் என்று எண்ணியபோதே பரவசமடைந்தான். அவளோடு பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அதுவே பேரின்பம் என்று மகிழ்ச்சியுற்றான். அவள் தன்னிடம் அன்பாகப் பேசுகிறாள் என்று நினைக்கும்போதே அவன் நெஞ்சு பெருமிதத்தால் விம்மியது. அவளுக்கும் தனக்கும் ஒரு காலத்தில் மணப் பேச்சு நடந்தது என்பதை அறிந்தபோது அவனுக்கு அந்தச் செய்தியே தேன்போலிருந்தது. அன்று இரவு அவளுக்குத் தான் வழித்துணையாகப் போக வாய்த்த சந்தர்ப்பத்தை எண்ணியபோது அவனுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாகப்பட்டது. ஆனால், அவளைத் திரும்ப வந்து இருட்டில் தேடித் தேடிப் பார்த்துக் காணாமல் சாதா வீட்டுக்குத் திரும்பியபோது அவன் நெஞ்சு பட்ட பாடு நெருப்புப் பிடித்த பஞ்சுப் பொதிகூடப்பட்டிருக் காது. தங்கத்தைக் காண வில்லை என்ற நினைப்பே அவன் அங்கத்தை யெல்லாம் அணுத்தோறும் அணுத்தோறும் வாள் கொண்டறுப்பது போலிருந்தது. அதன் பிறகு, அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/110&oldid=854213" இலிருந்து மீள்விக்கப்பட்டது