பக்கம்:மன ஊஞ்சல்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 101 தங்கத்தைக் கண்டு பிடிக்கும் வரையிலே வெறி கொண்டவன் போல் அலைந்து கொண்டிருந்தான். அவளைக் கண்டுபிடித்து அந்த ராகக்கப்பனிடமிருந்து மீட்டுக்கொண்டு வந்து வீட்டில் விட்ட பிறகு த ன் அவனுக்கு மனத்திலே அமைதி பிறந்தது. அப்போது அவன் தனக்கு உரிய பொருளொன்றைக் காப்பாற்றிவிட்டது போன்ற நெஞ்சநிறைவை அடைந்தான் இப்போது ஊரார் தன்னையும் அவளையும் இணைத்துப் பேசியதைக் கண்ட அவனுக்குப் பெருமையாக இருந்தது . பேரின்பமாகவும் இருந்தது. ஆனால், பாவம் தங்கத்தின் மனப்போக்கைமட்டும் அவன் அறிந்திருந்தால் எத்தனை துரம் வருத்தப்பட்டிருப்பான்! அவள் தன்னை விரும்ப வில்லை-தான் இத்தனை ஆர்வத்தோடு காதலிக்கும் அந்தப் பூங்கொடி தன்னைத் தழுவிப் படர மறுக்கிறது-மனமில்லாம விருக்கிறது என்ற உண்மையை அறிந்தால் அவன் உள்ளம்அந்தக் கள்ளம் கபடமில்லாத நல்ல உள்ளம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை அந்த நிலையில் இருந்து பார்ப் பவர்களே உணரலாம். தங்கத்தையும் நடராசனையும் இணைத்துக்கதை பேசிப் பொழுது போக்கிய ஊராரின் பழியைக் கேட்டு மனக் கிலேசம் கொண்ட இதயம் இன்னொன்று இருந்தது. அது யாருடைய இதயம் என்பதை நாம் சொல்லாவிட்டாலும் வாசகரே இந்நேரம் தெரிந்து கொண்டிருக்கலாம். . அந்த உள்ளம் ஊராரின் பேதைமையை எண்ணி ஒரு கணம் சிரித்தது. உண்மையில்லாத இந்தப் பழிப் பேச்சு மட்டும் உண்மையாக இருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தபோது வெந்து நொந்தது. தங்கத்தைப் பற்றிப் பேசப்படுகின்ற விஷயங்கள் உண்மையாக இருத்து அந்த இடத்தில் தங்கத்திற்குப் பதிலாகத் தான் இருத்தக் கூடாதா என்று எண்ணி ஏங்கியது. ஆ. | இதயத்துக்குரியவள் தன் எண்ணத்தில் ஏற்பட்ட இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/111&oldid=854214" இலிருந்து மீள்விக்கப்பட்டது