பக்கம்:மன ஊஞ்சல்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மன ஊஞ்சல் உணர்ச்சிகளைப் பற்றி வாய் விட்டு வெளிப்படையாக யாரிட்மும் தெரிவிக்காமலே இருந்தபடியால் அது யார் என்பதை நாமும் வெளிப்படையாகச் சொல்லாமல் இவ்வள வோடு நிறுத்திக் கொள்கிறோம். தங்கத்திற்கு வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பது என்னவோ மாதிரியிருந்தது, இவ்வளவு நாளும் அந்த வீட்டிற்குள்ளேயேதான் அடைபட்டுக் கிடந்தாள். வீட்டை விட்டால் தோட்டம்; தோட்டத்தை விட்டால் வீடு என்று மாறி மாறி யிருந்து வந்தாள். வெளியில் அவள் யார் வீட்டுக்கும் போய் எந்தப் பெண்களோடும் பே சி ப் பழகியதில்லை. அவளுக்குப் பழக்கம் நட்பு என்பதெல்லாம் ராதா ஒருத்தியிடம்தான். ராதாவிடமும் அவளுடைய வீட்டுக்குப் போய்த் தங்கம் பழகி வரவில்லை. ராதா தான் பெரும்பாலும் தங்கம் வீட்டுக்கு வருவாள். அவள் பத்துத் தடவை வந்தால் தங்கம் ராதா வீட்டுக்கு ஒரு தடவை போவாள். அதுவும் ராதா மிகக் கட்டாயமாகச் சொல்லி இழுத்துக் கொண்டு போனால் தான் உண்டு. அன்று என்னவோ தங்கத்திற்கு வீட்டிற்குள் இருப்பது பெருங் கட்டாயமாக இருந்தது. தோட்டத்திற்குப் போகக்கூடிய நேரமாக அது இல்லை. காலையிலோ மாலையிலோ என்றால் தோட்டத்துக்குப் போகலாம். உச்சியிலிருந்து அப்போது தான் கதிரவன் மேற்கில் இறங்க ஆரம்பித்து இரண்டு மணி யாகியிருந்தது. அந்த நேரத்தில் தோட்டத்திற்குப் போக முடியும்? . தங்கத்திற்கு வீட்டைவிட்டு எப்படியும் வெளியே போக வேண்டும் என்று ஒரே முனைப்பாக இருந்தது. அவன் மனித்தில் ஏற்பட்ட உணர்ச்சிக் குழப்பத்தை யாரிடமாவது கொட்டித் தீர்த்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. அம்மாவிடம் போய், 'அம்மா, ராதா வீட்டுக்குப் போய் வருகிறேன்' என்று சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/112&oldid=854215" இலிருந்து மீள்விக்கப்பட்டது