பக்கம்:மன ஊஞ்சல்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் . 103 மரகத அம்மாள் தன் மகள் விருப்பத்தை எப்போதும் மறுக்கக்கூடியவள் அல்ல. அவள் இப்போது விரும்பியதும் யோசித்து விடை சொல்ல வேண்டிய விஷயமல்ல. ஆகவே: 'போய் வாம்மா' என்று விடை கொடுத்தனுப்பினாள். தங்கம் ராதா வீட்டுப்படியில் கால் வைத்தபோது, ராதா கதவைத் திறந்துகொண்டு வெளியில் கால்வைத்தாள். தங்கத்தைக் கண்டவுடன் அவள் புன்சிரிப்புடன், 'தங்கம், நமக்குள் எவ்வளவு மன ஒற்றுமை பார்த்தாயா? உன்னை உடனடியாகப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. கிளம்பினேன். நீயும் என்னைப் பார்க்க வந்து நிற்கிறாய்?" என்று சொன்னாள், 'நீ எதற்காக என்னைப் பார்க்க நினைத்தாய்?" என்று கேட்டாள் தங்கம், 'காரணமெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது. ஏதோ என் மனத்தில் அவ்வாறு தோன்றியது. உடனே புறப்பட்டேன்' என்றாள் ராதா. "சரி, வா போகலாம்!' என்று தன் வீட்டுக்கு அழைத் தாள் தங்கம். "ஏன் இங்கேயே இருப்போமே" என்று தன் வீட்டுக்கு ஆழைத்தாள் ராதா. சரியென்று தங்கம் ராதா வீட்டுக்குள் நுழைந்தாள். இருவரும் கூடத்திலே போய் உட்கார்ந்தார்கள். சிறிது நேரம் அமைதி நிலவியது. யார் முதலில் பேசுவ தென்று தெரியாமல்உட்கார்ந்திருந்தார்கள் போலிருக்கிறது கடைசியில் தங்கம் "ராதா!' என்று பேச வாயெடுத் தாள். அதே சமயம் ராதாவும் "தங்கம்' என்று கூப்பிட்டாள். - அடுத்தாற்போல் இருவ்ரும் ஏக காலத்தில் ஒருவரை யொருவர் என்ன?’ என்று கேட்டுக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/113&oldid=854216" இலிருந்து மீள்விக்கப்பட்டது