பக்கம்:மன ஊஞ்சல்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மன ஊஞ்சல் “இன்று நம் மன ஒற்றுமை அதிகமாகத்தான்.இருக்கிறது. நீ சொல்ல வந்த செய்தியைச் சொல்' என்றாள் தங்கம் 'இல்லை, நீயே சொல்!" என்றாள் ராதா. 'இப்படி வம்பு பண்ணினால், ஒற்றுமை வேற்றுமையாகி விடும். பேசாமல் நீயே சொல்!" என்று தங்கம் செல்லக் கோபத்துடன் சொன்னாள். ராதா பணிந்து விட்டாள். - "தங்கம் உண்மையாகச் சொல். உனக்குக் கொஞ்சங் கூட நடராசனைப் பிடிக்கவில்லையா? என்று கேட்டாள் Jrsr点5m・ "ராதா, நீ உண்மையாகச் சொல். அவரை நீ கொஞ்சங் கூட வெறுக்க வில்லையா?” என்று கேட்டாள் தங்கம். "குறும்புக்காரியடி நீ எப்பொழுதும் மனத் தில் உள்ளதைச் சொல்லவே மாட்டாய்' என்று கடிந்து கொண்டாள் ராதா, - "நீதான் என்னவாம்? அப்படியே பிட்டுப் பிட்டுச் சொல்லிவிடுகிறாயாக்கும்?' என்று கேட்டாள் தங்கம். “எனக்கு அந்த நடராசனைக் கொஞ்சங்கூடப் பிடிக்க வில்லை." என்றாள் ராதா. தன் வாயைக் கிளறத்தான் அவள் அப்படிச் சொல்கிறாள் என்று தெரிந்து கொண்டாள். தங்கம். "எனக்கும் அப்படித்தான்!” என்றாள். 'ஆனால், அத்தக் கை மட்டும் ஒழுங்காக இருந்தால்...' என்று குறும்புத் தனமாக ஆரம்பித்தாள் ராதா, - 'அவ்வளவுக்கு ஏன் போகிறாய்? கை எப்படியிருந் தாலும் கட்டிக்கொள்ளத்தான். ஆளிருக்கிறதே! என்றாள் தங்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/114&oldid=854217" இலிருந்து மீள்விக்கப்பட்டது