பக்கம்:மன ஊஞ்சல்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 105 உடனே ராதாவின் தலை தானாகக் கவிழ்ந்தது. அவள் முகம் சிவந்தது. அவளுக்குத் தங்கத்தை நிமிர்ந்து பார்க்கவே கூச்சமாயிருந்தது. அவள் நடராசனைக் காதலிக்கிறாள் என்று நிச்சயமாகத் தெரிந்துகொண்டாள் தங்கம். இதே உணர்ச்சி களை முன்னொரு நாள் ராதா வெளிப்படுத்தியபோது" அவள் உள்ளத்தைச் சரியாகத்தெரிந்து கொள்ளாத தங்கம் இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டாள். ஆனால், நடராசன் தங்கத்தின்மேல் ஒரே உயிராக இருக் கிறான் என்ற விஷயம் அந்தப் பேதைப் பெண்கள் இரண்டு பேருக்குமே தெரியாது. சிறிது நேரம் அமைதி நிலவியது. பிறகு தங்கம் பேசத் தொடங்கினாள். "ராதா, தான் காணாமற். போனதைப் பற்றி ஊரிலே என்ன பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா?’ என்று கேட்டாள். "ஊர் அப்படித்தான் பேசும் அப்படிப் பேசப்பட்டவர் கள் இருவருமே திருமணம் செய்துகொண்டுவிட்டால் அப்புறம் ஆகா காதல் தம்பதிகள்' என்று புகழ்ந்து பாராட்டும். - -- "அப்படிப் பேசப்பட்டவர்களில் ஒருவருக்கும் பேசப் படாதவள் ஒருத்திக்கும் திருமணம் நடந்தால் இந்த ஊர் என்ன செய்யும்?' என்று கேட்டாள் தங்கம். . ராதா பதில் சொல்ல வாயெடுத்தாள். ஆனால், சட்டெனறு தன் உதட்டைக் கடித்துக்கொண்டு, முன்னிலும் நாணம் படர்ந்து சிவந்த முகத்தோடு, 'தங்கம்! வரவர நீ பெரிய குறும்புக்காரியாய் வந்துவிட்டாய்! உன்னை அந்த ஒற்றைக் கையனுக்கே திருமணம் செய்து வைத்துத் தான் தண்டிக்க வேண்டும்' என்று கூறினாள். சரி, அப்படியேதான் செய்துகொள்கிறேனே!" என்று அலட்சியமாகச் சொல்லிய தங்கம் ராதாவின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள், ! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/115&oldid=854218" இலிருந்து மீள்விக்கப்பட்டது