பக்கம்:மன ஊஞ்சல்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மன ஊஞ்சல் அலட்சியமான அவள் கூற்றைக் கூடச் சரியாகப் புரிந்து கொள்ளாத ராதாவுக்கு உடனே முகத்தில் ஏமாற்றக்குறி படர்ந்தது. பேச்சுக்காகத் தங்கம் அப்படிக் கூறியிருப்பாள் என்று அவள் எண்ணிய போதிலும் கூட, அவள் அப்படிச் சும்மா சொன்னதைக்கூட அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் உணர்ச்சிகளை ஆரம்பத் திலிருந்தே கவனித்துக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த தங்கம், "Hயப்படாதே! நான் உனக்குப் போட்டியாக வந்துவிட மாட்டேன்!” என்று சொல்லிச் சமாதானப்படுத் தினான். அதன் பிறகுதான் ராதாவின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருந்த வெட்கத்தையும் ஒதுக்கிவிட்டு ராதா, தங்கத்திடம் தன் இதயத்துணர்ச்சிகளே வெளிப்படுத்திப் பேசத் தொடங்கினாள். அன்று, புளிய மரச் சந்திலிருந்து நடராசன் தன்னைத் து.ாக்கிக்கொண்டு வ ந் த ைத யு ம் , பிறகு தான் கண் விழித்ததையும், கீழே இறங்கிப் பயந்து அவரை ஒட்டிக் கொண்டே வந்ததையும் கூறினாள். பிறகு, அவர் தன்னை விட்டுப் போனது முதல், அவள் எதையோ இழந்து தவிப்பது போல் உணர்ந்ததையும், அவருடன் தான் அந்த இருட்டில் ஒட்டி ஒட்டிக்கொண்டு வந்த செயலை எண்ணிப் பார்த்து உள்ளம் சிலிர்த்ததையும், தன் வாழ்வில் அவரே துணையாக என்றும் இருக்கக் கூடாதா என்று எண்ணி ஏங்கியதையும் விரிவாக எடுத்துக் கூறினாள். பொதுவாகவே, பெண்கள் ஒருவரோடொருவர் நெருங்கிப் பழகிவிட்டால், தங்கள் உள்ளத்து இரகசியங்களை யெல்லாம் ஒருவர்க்கொருவர் எடுத்துச் சொல்லி விடுவார்கள், ஆனால், தங்கம் இந்த விஷயத்தில் அழுத்தக்காரி என்றுதான் சொல்ல வேண்டும். அவள் தன் அத்தான் சு ந் த ரே ச னி ட ம் கொண்ட ஈடுபாட்டைப் பற்றி ராதாவிடம் சொல்லவே யில்லை. நடராசனைப் பொறுத்தவரை அவள் தன் மனக் கருத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/116&oldid=854219" இலிருந்து மீள்விக்கப்பட்டது